மாஸ் காட்டிய கிங் கோலி!!

விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
பெங்களூரு வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் இன்றைய போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர் முடிவில் 186 ரன்கள் எடுத்தது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா , ராகுல் திரிபாதி களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 11ரன்கள் , ராகுல் திரிபாதி 15ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஹென்ரிச் கிளாசென், மார்க்ரம் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

குறிப்பாக ஹென்ரிச் கிளாசென் அதிரடி காட்டி 49 பந்துகளில் சதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு ஐதராபாத்5விக்கெட் இழப்பிற்கு 186ரன்கள் எடுத்தது. இதையடுத்து 187 என்ற இலக்குடன் பெங்களூரு களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, டூப்ளசிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். 17.1 ஓவர் வரை ஒரு விக்கெட் கூட ஹைதராபாத் அணியால் எடுக்க முடியவில்லை. இருவரும் இணைந்து 172 ரன்கள் எடுத்தனர்.

விராட் கோலி 63 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அதைத் தொடர்ந்து அவர் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்த ஓவரில் டூப்ளசிஸ் 71 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் பிரேஸ்வெல் ஆகியோர் இலக்கை எட்டி அணியை வெற்றி பெறச் செய்தனர்.
newstm.in