1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? பூணூலை எப்பொழுதெல்லாம் மாற்ற வேண்டும்..!

1

ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.

ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பௌர்ணமியன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.

ஆவணி அவிட்டம் 2023 தேதி 

இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி அவிட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ம் தேதி புதன்கிழமை வருகிறது. காயத்ரி ஜபம் ஆகஸ்ட் 31 ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

  • மாதம் ஒரு முறையாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • அமாவாசை தர்ப்பணத்தின் போது பூணூல் மாற்றிக்கொண்டு தர்ப்பணம் பண்ணலாம்.
  • நாம் சொன்னால் வாத்தியார் மாற்றி விடுவார். இல்லையேல் நாமே மந்திரத்தை சொல்லி மாற்றிக்கொள்ளலாம்.
  • தீட்டு உள்ள இடங்களுக்குச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டும்.
  • 10 நாட்களுக்குள் துக்கம் விசாரிக்கச் சென்று வந்தால் பூணூல் மாற்ற வேண்டியது அவசியம்.
  • மயானத்திற்கு சென்று வந்தால் கண்டிப்பாக பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பிரசவம் ஆன வீடுகளுக்கு, புண்யாகவசனத்திற்கு முன் போய் வந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பொதுவாக 10 நாட்கள் வரை பிரசவத்தீட்டு. இது அவரவர்கள் வீடுகளிலும் உண்டு. 11வது நாள் புண்யாகவசனம் ஆனால்தான் தீட்டு போகும்.
  • அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறக்கும் சில வீடுகளில், தாயின் உடல் நலம் கருதி 21ம் நாள் புண்யாகவசனம் செய்வதும் உண்டு. அது வரை தீட்டுத்தான்.
  • புண்யாகவசனம் என்று நடக்கிறதோ அன்றைக்குத்தான் தீட்டுப் போகும். அன்றைய தினம் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • இது தவிர, உறவினர்கள் இறந்தால், பங்காளிகளுக்கு 10 நாள் தீட்டு. அதற்கு மறு நாள் பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • சட்டை, பனியன் கழட்டும் பொழுது சில சமயங்களில் பனியனுடன் பூணூலும் சேர்ந்து கழண்டு விடும்.அப்பொழுது அதை உடனடியாக மாட்டிக்கொண்டு, மீண்டும் முறைப்படி மந்திரம் சொல்லி வேறு பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
  • பூணூல் என்பது கர்ணனின் கவச குண்டலங்கள் போன்றது.அதை அணிந்திருப்பவனை தீய சக்திகள் மற்றும் பேராபத்துக்களிலிருந்து காக்கும் சக்தி வாய்ந்தது.அதில் உள்ள முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு என்று பெயர்.
  • பூணூலில் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி சக்தி ஏற்றி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.அப்படி வைத்திருந்தால் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றும். எனவே அதற்கு உரிய மரியாதை கொடுத்து பராமரிக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like