வாழ்வை இனிதாக்கும் சூரிய நமஸ்காரம்!

உடல் வளர்த்தேன்…உயர் வளர்த்தேனே… என்றார் திருமூலர் . அதென்ன உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
 | 

வாழ்வை இனிதாக்கும் சூரிய நமஸ்காரம்!

உடல் வளர்த்தேன்…உயர் வளர்த்தேனே…  என்றார் திருமூலர் . அதென்ன உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. உயிர் இருந்தால் தானே உடல் இருக்கும். இப்படி சில கேள்விகள் நமக்குள் எழும்.

 நம்முடைய முன்னோர்கள் நமக்கு பல நுட்பமான வழிமுறைகளை,பயிற்சிளை தந்து சென்றுள்ளனர். உடல் வளர்த்தல் என்பது வெறும் உடம்பை பேணி காக்கும் செயல் இல்லை உடலில் உள்ள  உயிரை சிறப்புற வளர்ப்பது.  உடல் ஹார்ட்வேர் என்றால் நம்முடைய உள்ளம் அதாவது மனம் சாப்ட்வேர். ஹார்ட்வேர் சாஃப்ட்வேர் இரண்டும் ஒருங்கிணைந்தால் மட்டுமே சிஸ்டம் சரியாக இருக்கும்.

உடல் குறைபாடுகள்  நமது தினசரி இயக்கத்தில் பல்வேறு விதமான இடையூறுகளை தந்து நமது அன்றாட வாழ்க்கையை சிக்கலாக்கி விடுகிறது.

இயற்கை தருவது  ஒருபுறம் இருக்க ,நாமாகவே நம்முடைய மனதை போட்டு வாட்டி வதைத்து பல்வேறு நோய்களின் இலக்குக்கும் ஆளாகி விடுகிறோம். நமது    உடல் ஒரு தந்திரம் என்றால் அதில் மனம் ஒரு மந்திரம். இந்த மனதை அடக்கும் தந்திரமே , மூச்சு பயிற்சி, யோகாசனங்கள் ஆகிய மந்திரங்கள்.


 தியானம், பிராணயாமம் , யோகசனம் என எதில்  ஈடுபட்டாலும் முதலில் அதற்கு தகுந்தாற்போல உடலை, மனதை தயார் செய்ய வேண்டும்.

 அதிகாலை தரும் உற்சாகம்

 மனம் - உடல் இரண்டையும் தயார் செய்ய உகந்த நேரம் ஓசோன்  வாயு  நிரம்பி இருக்கும் அதிகாலை பொழுது – காலை 4 -  6மணி வரை. இந்த நேரம் நமது உடலையும் – உயிரையும் வளர்த்திட மேம்படுத்திட சிறந்த நேரம்.


சாதிக்க விரும்பினால் நேரத்தில் உறங்க செல்

அதிகாலையில் துயில் எழுவது மட்டுமல்ல குறித்த நேரத்தில் உறங்கச் செல்வதும் அதி முக்கியம்.எப்பாடுப் பட்டாவது தினந்தோறும் 
இரவு 10 மணிக்குள் தூங்க செல்வது வெற்றிக்கான முதல் படி. ஆம், 10 மணிக்குள் தூங்க பழகிவிட்டால் காலை 4 மணிக்கு விழிப்பு என்பதும் சாத்தியமாகி விடும். 


தினமும் காலை எழுந்தவுடன், பல் துலக்குவதை நாம் பழகிக்கொண்டதுபோல, யோகத்தை நாம் பழக வேண்டும்.நம்மை ஒருநிலைப்படுத்தும் முயற்சியாக, நமது உடல் ஒரு குறிப்பிட்ட நிலையில் அமர்வது தான் யோகாசனம். பல்வேறு எண்ணங்கள் நமக்குள் அலைமோதினாலும், நம் உடலையும், உள்ளத்தையும் பக்குவப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம். தினமும் காலை 4 - 6 மணி வரை, மாலை 4 - 6 மணி வரை யோகாசனம் செய்வதற்கான சரியான நேரம்.
ஏன் இந்த குறிப்பிட்ட நேரம்? என்று கேட்கலாம். இந்த நேரத்தில்தான், நம் வயிற்றில் எந்த உணவும் தேங்கியிருக்காது. எனவே இரவு நன்றாக ஓய்வெடுத்து எழுந்த பிறகு, மனமும் உடலும் மிகுந்த அமைதியாகக் காணப்படுவதே இதற்கு முக்கிய காரணம்.


 ஆசனங்களில் அவசியம் சூர்ய நமஸ்காரம்.


யோகக்கலையில்   மிக முக்கியமானது சூரிய நமஸ்காரம்  நல்ல பன்னிரண்டு ஆசனங்களின்  அற்புதமான தொகுப்பே சூர்ய நமஸ்காரம். தனித்தனியாக ஆசனங்களை செய்வதைவிட, சூர்ய நமஸ்காரம் செய்தாலே 12 விதமான ஆசனங்களின் பலன் கிடைத்துவிடும்.
 சூர்ய நமஸ்காரம்  செய்வது எப்படி?

1. நமஸ்கார் முத்ரா: முதலில் நேராக நின்றுகொண்டு, மார்புக்கு நேராக இரு கைகளையும் குவித்த நிலையில் நமஸ்கார முத்திரை யில் வைக்க வேண்டும்.
2. ஊர்த்துவாசனம்: பிறகு கைகளை மெதுவாக உயர்த்தி, சற்று பின்னோக்கி வளைய வேண்டும்.
3. பாத ஹஸ்தாசனம்: பின்னர், முன்னோக்கி வளைந்து, கீழ்நோக்கி குனிந்து முட்டியை மடக்காமல், இரு கைகளாலும் இரு பாதங்களையும் தொடவேண்டும்.
4. அஷ்வ சஞ்சலாசனம்: அடுத்து, ஒரு காலை மட்டும் பின்னோக்கி நீட்டி, முன்னோக்கிப் பார்க்க வேண்டும்.
5. மேரு ஆசனம்: அடுத்து, இன்னொரு காலையும் பின்னோக்கி கொண்டு சென்று, முதுகை உயர்த்தி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கால் பாதங்கள் இரண்டும் தரையில் நன்கு பதிந்திருக்க வேண்டும்.
6. அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்: பின்னர், உடலின் அத்தனை அங்கங்களும் பூமியில் படுவதுபோல படுக்க வேண்டும். இரண்டு உள்ளங்கைகளும் மார்புக்கு பக்கவாட்டில் வைக்கவும்.இதன் பெயர் அஷ்டாங்க பூமி ஸ்பரிசம்.
7. புஜங்காசனம்: பிறகு, இரு கைகளையும் மார்புக்கு இணையாக தரையில் ஊன்றி, தலையை மட்டும் மேலே தூக்கிப் பாம்பு படமெடுப்பது போல்பார்க்க வேண்டும்  இது புஜங்காசன நிலை
இந்த நிலையில் இருந்து, மீண்டும் படிப்படியாக 6,5,4,3,2,1 என அஷ்டாங்க பூமி ஸ்பரிசம், மேரு ஆசனம், அஷ்வ சஞ்சலாசனம், பாத ஹஸ்தாசனம்,ஊர்த்துவாசனம் என ஒவ்வொரு ஆசனங்களாக பிறகு, இறுதியாக நமஸ்கார் முத்ரா நிலையில் நின்று, கைகளைத் தொங்க விட வேண்டும்.
மேற்கண்ட 12 ஆசனங்களையும் வலது பக்கம் ஒரு முறை, இடது பக்கம் ஒரு முறை செய்வது, ஒரு  சுற்று சூர்ய நமஸ்காரம். ஆரம்பத்தில் மூன்று சுற்றுக்கள் செய்து செய்து, பின்னர் படிப்படியாக எண்ணிக்கையை 5,7,9,12   எனஅதிகரிக்கலாம்.12 முறைக்கு மேல் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டாம்.

யார் சூர்ய நமஸ்காரம் செய்யக்கூடாது?

கர்ப்பிணிகள், தலைச்சுற்றல் (வெர்டிகோ) மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், இதய நோய், மூட்டு வலி, கழுத்துவலி,ஸ்பாண்டிலைசிஸ், தண்டுவடப் பிரச்சினை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சூர்ய நமஸ்காரம் கண்டிப்பாகச் செய்யக் கூடாது.

நாம் தினசரி தொடர்ந்து சூரிய நமஸ்காரங்கள் செய்து வந்தால்  நோய் நொடிகள் நீங்கி நமது மனமும் உடலும் சூரியனைப் போல பிரகாசிக்கும்.

# சர்வதேச யோகா தினம் 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP