முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனங்கள்! 

யோகா பயிற்சி உடலை உறுதியாக்கும் பயிற்சி மட்டுமல்ல... நோய்கள் வராமல் தடுக்கும் சிகிச்சை முறையும் கூட. தினமும் யோகா செய்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 | 

முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனங்கள்! 

யோகா பயிற்சி உடலை உறுதியாக்கும் பயிற்சி மட்டுமல்ல... நோய்கள் வராமல் தடுக்கும் சிகிச்சை முறையும் கூட. தினமும் யோகா செய்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள நோய்கள் மறையத் தொடங்கும். நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் யோகாவுக்கு உண்டு. இன்றைக்கு முதுகு வலி பிரச்னை அதிகம் பேருக்கு உள்ளது. முதுகு வலி வராமல் தடுக்க, முதுகை வலுப்படுத்தும் ஆசனங்கள் நிறைய உள்ளன. அவற்றில் எளிய மற்றும் கடினமான இரண்டு பயிற்சிகளை தெரிந்துகொள்வோம்.

உத்தானாசனம் தழுவல் 

முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனங்கள்! 

எப்படிச் செய்வது: கால்களை அகட்டி நேராக நிற்க வேண்டும். மூச்சை நன்கு இழுத்தபடி கைகளை முன்புறமாகத் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். ஒரு விநாடிக்குப் பிறகு மூச்சை விட்டபடி முன்புறமாகக் குனிந்து கைகளைப் பாதத்துக்கு அருகே வைக்க வேண்டும். கால்கள் நிலையாக இருக்க வேண்டும். முடியாதவர்கள் முட்டியைச் சற்று மடக்கிக்கொள்ளலாம். சில விநாடிகள் இந்தநிலையில் இருந்துவிட்டு மூச்சை இழுத்தபடி உடலை உயர்த்திக் கைகளைத் தலைக்கு மேல் வைத்திருக்கும் நிலைக்கு வர வேண்டும். மூச்சைவிட்டபடி இயல்பு நிலைக்கு வர வேண்டும். 

குறிப்பு: இது ஆரம்பநிலை யோகாசனம்தான். எனவே, யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், எலும்பு, வேறு உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெற்றுச் செய்யலாம். மற்றவர்கள், யோகா பயிற்சியாளர்களிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது. 

பலன்கள்: உடல் வலியைப் பொக்கும். முதுகு, தொடை எலும்புகள் வலுவாகும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். 

ஊர்துவதனுராச னம் 

முதுகெலும்பை வலுப்படுத்தும் ஆசனங்கள்! 

செய்வது எப்படி: தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். கால்களை மடக்கி உடலுக்கு நெருக்கமாகக் கொண்டுவர வேண்டும். கால்களுக்கு இடையே சற்று இடைவெளி இருக்கட்டும். கைகளை, தலைப் பக்கம் கொண்டுவந்து உள்ளங்கை, விரல் உடலைப் பார்த்தபடி தரையில் பதிக்கவும். இப்போது மூச்சை நன்கு இழுத்துக் கை, கால்களைத் தரையில் அழுத்து உடலை உயர்த்த வேண்டும். முடிந்தவரை வயிறு பகுதி மேலே வரும் அளவுக்கு உடலை வில் போல வளைக்க வேண்டும். இப்போது உடலின் முழு எடையும் கை - கால்களில் இருக்கும். இந்த நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு மூச்சை வெளியே விட்டப டி பழைய நிலைக்கு வர வேண்டும். 

குறிப்பு: ஒரு நாளைக்கு இதை ஆறு முறை வரை செய்யலாம். இந்த யோகா பயிற்சியை அனைவரும் முயற்சிக்க வேண்டாம். நீண்ட நாட்கள் யோகா பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே செய்ய வேண்டும். 

பலன்கள்: தினமும் செய்து வந்தால் முதுகெலும்பு வலுப்பெறும். கூன் விழுவது தவிர்க்கப்படும். உடல் புத்துணர்வு பெறும். கை, கால்கள் பலம் பெறும். நுரையீரல் செயல்திறன் அதிகரிக்கும். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP