Logo

புற்றுநோய் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி அசத்திய ரோபோ!

தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக ரோபோ ஒன்று மிக ஸ்மார்ட்டாக செய்து அசத்தியுள்ளது.
 | 

புற்றுநோய் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி அசத்திய ரோபோ!

புற்றுநோய் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி அசத்திய ரோபோ!

தண்டுவட அறுவை சிகிச்சையை ரோபோ ஒன்று மிக ஸ்மார்ட்டாக செய்து அசத்தியுள்ளது. 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சமூக மருத்துவ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மருத்துவர் நீல் மல்கோத்ரா, ரோபோ உதவியுடன் ஒரு பெண்ணுக்கு தண்டுவட அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணரான இவர் எலும்புகளுக்கு நடுவே வளரும் கட்டிகளை ரோபோக்கள் உதவியுடன் அகற்றி வருகிறார்.

புற்றுநோய் கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி அசத்திய ரோபோ!

இந்நிலையில், முதுகெலும்பும் கழுத்தும் இணையும் பகுதியில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் கட்டி ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கும்போது தான், கழுத்தில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. உடனே அந்த கட்டியை பரிசோதித்த டாக்டர்கள் புற்றுநோய் கட்டி என உறுதிசெய்தனர். டாக்டர் நீல் மல்கோத்ரா தலைமையிலான குழு ரோபோ உதவியுடன் அப்பெண்ணின் உடலில் இருந்து அந்த கட்டியை அகற்றியது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாகவும், இனி அந்த பெண்ணுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் மருத்துவர் நீல் மல்கோத்ரா கூறியுள்ளார். உலகில் ரோபோ உதவியுடன் செய்யப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இது தான் என்பது குறிப்பிடதக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP