சீனாவில் குளோனிங் முறையில் இரு குரங்குக் குட்டி உருவாக்கம்

சீனாவில் குளோனிங் முறையில் இரு குரங்குக் குட்டி உருவாக்கம்
 | 

சீனாவில் குளோனிங் முறையில் இரு குரங்குக் குட்டி உருவாக்கம்


சீனாவின் நியூரோ சயின்ஸ் நிறுவனம் குளோனிங் முறையில் இரு குரங்குக் குட்டிகளை உருவாக்கி உள்ளது. 

சீனா: ஷாங்காயில் உள்ள நியூரோ சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான மூ-மிங் பூ,  மனித நோயை கண்டுப்பிடிக்க பயன்படுத்தக்கூடிய குரங்குகளை உருவாக்குவதற்காக கடந்த பத்தாண்டுகளாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில்  அவரது நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஒரு முக்கிய மைல்கல் செய்தியை அறிவித்துள்ளனர். இதற்கு முன்பு பயன்படுத்திய டோலி ஆடுகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, குளோனிங் முறையில்  Zhongzhong மற்றும் Huahua, இரு குரங்குக் குட்டிகளை உருவாக்கி உள்ளது. 

குளோனிங்  முறையில் மனிதர்களை உருவாக்க முடியும். இது தவறு என்று எழுந்த பிரச்சனைகளை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் இந்த ஆராய்ச்சியின் முயற்சியை கைவிட்டது. சற்றும் தளராத சீனா அரசு, இந்த ஆராய்ச்சிக்கு பெருமளவில்  முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.   


1996 ல் டோலி பிறந்த பிறகு, விஞ்ஞானிகள் விரைவாக எலிகள், பன்றிகள், நாய்கள், பூனைகள், பசுக்கள் மற்றும் பலவற்றை எப்படி  குளோனிங் செய்வது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டனர். 2003 ஆம் ஆண்டில், பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் 716 முட்டைகள் பயன்படுத்தி இந்த முயற்சியை மேற்கொண்டனர் ஆனால் அவர்களால் ஒற்றை குளோனை உருவாக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த முறையைப் பயன்படுத்தி ப்ரீமியம் குளோனிங் மற்றும் நீட்டிப்பு மனித குளோனிங் செய்வது சாத்தியமற்றது எனக் கூறப்பட்டது. 

தற்போது சீனா கண்டுப்பிடித்திருக்கும் இத்தகைய முயற்சி குரங்குக்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளதால் இது மனிதனை உருவாக்கும் முதல் படி என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

வீடியோ லிங்க் :

https://youtu.be/sAiuoTp-jVo

குளோனிங் என்றால் என்ன? 

இயற்கை முறையில் உருவாகும் ஒரு குழந்தை முழுக்கமுழுக்க ஆணின் விந்து மற்றும் பெண் கருமுட்டை சேரும் போது தாய் தந்தையரின் குணாதிசயங்கள் அந்தக் குழந்தைக்கு வரும். ஆனால் ஒரு தாயைப் போலவோ அல்லது தந்தையைப் போலவோ முழுக்க முழுக்க இருக்காது என்பதே உண்மை

ஆனால் குளோனிங் முறையில் உருவாகும் உயிருக்கு முழுக்க முழுக்க தந்தை அல்லது தாயைப் போல உருவாக்க முடியும். அதாவது 23 ஆணின் செல்கள் மற்றும் 23 பெண்ணின் செல் சேர்ந்து உருவாகுவதற்கு பதில் 46 செல்களும் ஆணிடம் இருந்தோ அல்லது பெண்ணிடம் இருந்தோ எடுத்து செயற்கை முறையில் உருவாக்கப்படுவது தான் குளோனிங் ஆகும்.. 

  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP