இன்ஸ்டாகிராம் மூலம் யூடியுப்புக்கு நெருக்கடி: ஃபேஸ்புக் அதிரடி

இன்ஸ்டாகிராம் நிறுவனம் யூடியூப் போல அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவியேற்றும் வசதியை தரவுள்ளது.
 | 

இன்ஸ்டாகிராம் மூலம் யூடியுப்புக்கு நெருக்கடி: ஃபேஸ்புக் அதிரடி

இன்ஸ்டாகிராம் நிறுவனம் யூடியூப் போல அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவியேற்றும் வசதியை தரவுள்ளது. இதன் மூலம் யூடியூபுக்கு கடும் போட்டி அளிக்க உள்ளது ஃபேஸ்புக்.

சமூகவலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பயன்படுத்தபடும் இன்ஸ்டாகிராம், தனது பயனாளர்களை கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் தற்போது, 60 விநாடி ஓடக்கூடிய வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதி உள்ளது. நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோவை அப்லோட் செய்யும் வசதி வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது, ஒரு மணி நேரம் வரை ஓடக்கூடிய வீடியோவை பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சோஷியல் மீடியாவைக் காட்டிலும் யூடியூபை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் யூடியூபிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த புதிய மாறுதலை ஃபேஸ்புக் நிறுவனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதிக நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் இந்த வசதி வருகிற 20ம்தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. 

மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டேரியில் மென்ஷன் செய்யப்படும் நபர் உடனடியாக அதனை ரீபோஸ்ட் செய்யும் வசதியையும் இன்ஸ்டாகிராம் கொண்டுவந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP