உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம்- பகீர் பயோ ஷாக்!

இறந்தவர்களின் உடல் கெட்டுப்போகாமல் இருக்க பனிக்கட்டியை வைத்து பாதுகாப்பது உண்டு. ஆனால், எதிர்காலத்தில் உயிர்தெழ வைக்கக் கூடிய மருத்துவ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், முக்கிய புள்ளிகளை உயிர்த்தெழ வைக்க இப்போதே உடலை உறைநிலையில், பாதுகாத்து வைக்கக் கூடிய க்ரையோஜெனிக்ஸ் என்ற தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
 | 

உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம்- பகீர்  பயோ ஷாக்!

உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம்- பகீர்  பயோ ஷாக்!

இறந்தவர்களின் உடல் கெட்டுப்போகாமல் இருக்க பனிக்கட்டியை வைத்து பாதுகாப்பது உண்டு. ஆனால், எதிர்காலத்தில் உயிர்தெழ வைக்கக் கூடிய மருத்துவ தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், முக்கிய புள்ளிகளை உயிர்த்தெழ வைக்க இப்போதே உடலை உறைநிலையில், பாதுகாத்து வைக்கக் கூடிய க்ரையோஜெனிக்ஸ் என்ற தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறந்த பின் உயிர்த்து எழுவதற்கு இயேசு கிறிஸ்துவா? என கேட்கலாம். ஆனால் அதைவிட பெரிய ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது உடலை உறைய வைக்கும் க்ரையோஜெனிக்ஸ் தொழில் நுட்பம்.

பொதுவாக மருத்துவத் துறையில் க்ரையோஜெனிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக செயற்கை கருத்தரித்தல் துறையில் இதன் பயன்பாடு அதிகம். பெண்ணிடமிருந்து பெறப்படும் கருமுட்டையை, விந்தணுவுடன் சேர்த்து டெஸ்ட் டியூபில் வளர்த்து, நான்கு - ஐந்து நாட்கள் ஆன கருத்தரித்த முட்டையை உறைநிலையில் பாதுகாத்து வைக்கின்றனர். அதேபோல், பெண்களின் முட்டையையும், ஆண்களின் விந்தணுக்களையும் உறைநிலையில் பாதுகாத்து வைக்கின்றனர். 

புற்றுநோயால் பாதிக்கப்படும் இளம் பெண்களுக்கு, கீமோ, ரேடியேஷன் தெரப்பி அளிக்கப்படும். அப்போது, தலைமுடி கொட்டுவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படும். அதேபோல், சினைப்பையில் உள்ள முட்டைகளும் அழிந்துவிடும். இவர்களுக்கு க்ரையோஜெனிக் தொழில்நுட்பம் முறையில் முட்டையை பாதுகாத்து வைக்கின்றனர் மருத்துவர்கள். இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மனித உடலை பதப்படுத்தி வைக்கும் புதிய முயற்சி அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவில் அரிசோனா  மாகாணத்தை சேர்ந்த புற்றுநோய் பாதித்த ஒரு 14 வயது சிறுமி எதிர் காலத்தில் தனது நோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மீண்டும் தன்னை உயிர்ப்பிப்பதற்காக தன்னை உறைய வைக்குமாறு நீதிமன்றத்திடம் கேட்டுள்ளார். அவளது கோரிக்கையை  கேட்டு இந்த விபரித சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளது நீதிமன்றம்.

உடலை உறைய வைக்கும் தொழில்நுட்பம்- பகீர்  பயோ ஷாக்!அரிசோனா க்ரையோஜெனிக் விஞ்ஞானிகள் குழு, டெட்ராய்ட்  பகுதியில் உள்ள  ஒரு ஆய்வகத்தில்  சிறுமியின்  உடலை -196 டிகிரி செல்சியஸில் உறைய வைத்துள்ளனர். உடல் உள்ளுறுப்புகளை அழுகாமல்  இருக்கவும்,  உடலுக்குள் பனித்துகள்கள் உருவாகாமல் தடுக்கவும் வேதிப்பொருட்கள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு கூட பத்திரமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எதிர்காலத்தில், இறந்தவர்களை  உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டால், சாகா வரம் கிடைக்கும் என்ற ஆசையில், பல பிரபலங்களும் தங்கள் மரணத்துக்குப் பிறகு உடலை க்ரையோஜெனிக் முறையில் பதப்படுத்தி வைக்க முன்பதிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP