கிரகணத்தினால் அழிந்தது போர்!

சந்திரகிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வு. இதற்கும் போர் தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என கேட்கலாம். ஆனால் உண்மையில் கிரகணத்தின் வரலாறு கதைகளில் இரண்டு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
 | 

கிரகணத்தினால் அழிந்தது போர்!

சந்திரகிரகணம் என்பது ஒரு வானியல் நிகழ்வு. இதற்கும் போர் தோல்விக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என கேட்கலாம். ஆனால் உண்மையில் கிரகணத்தின் வரலாறு கதைகளில் இரண்டு சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

சந்திரகிரகணமும் சூனியக்காரர்களும்!

முந்தைய காலத்தில் கிரகணம் என்பது தீண்டதகாத காரியம், இயற்கைக்கு புரம்பான நிகழ்வி, கிரகணம் நடைபெறும் அந்த 3 மணி நேரம் தீட்டு... பாம்பு சந்திரனை விழுங்கும் செயல் என அடுக்கடுக்காக பல கட்டுக்கதைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மக்களும் இத்தகைய கதைகளை நம்பினர். கிரகணத்தின்போது சந்திரன் பூமிக்கு பின்னால் ஒளிந்துகொள்ளும். இதை சாதகமாக பயன்படுத்தி கடந்த கி.மு.413 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி  கிரேக்கத்தில் உள்ள சில சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என மக்களிடம் சவால் விட்டனர். முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று இதை உண்மை என மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

தோல்வியில் முடிந்த போர் 

கிரகணத்தினால் அழிந்தது போர்!

இதையடுத்து, கி.மு. 425, அக்டோபர் 9 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது ஏதென்ஸ்காரர்கள், போரை நிறுத்திக்கொண்டு வீட்டுக்கு செல்ல திட்டமிட்டனர். அப்போது அவர்கள் துசிடிடெஸ் என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். மதகுருவின் வாக்கிற்கிணங்க 27 நாட்கள் எந்த தாக்குதலிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தனர். 27 நாளாவது நாளில் சந்திரகிரகணம். அன்று எதிரணியான சைராகுசன்ஸ் திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர். அமைதியாக ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்று தலைவனான யூரிமேடான் இறந்தார். சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால் போரே அழிவை சந்தித்தாக வரலாறு கட்டுரை கதைகள் விளக்குகின்றன. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP