சூரியனுக்கு மிக அருகே செல்லும் நாசா விண்கலம்!

இந்த ஆண்டு துவக்கத்தில் பூமியில் இருந்து கிளம்பிய நாசாவின் பார்க்கர் விண்கலம், இதுவரை எந்த மனித படைப்பும் செல்லாத அளவு, சூரியனுக்கு மிக அருகே சென்று சாதனை படைக்க இருக்கிறது.
 | 

சூரியனுக்கு மிக அருகே செல்லும் நாசா விண்கலம்!

இந்த ஆண்டு துவக்கத்தில் பூமியில் இருந்து கிளம்பிய நாசாவின் பார்க்கர் விண்கலம், இதுவரை எந்த மனித படைப்பும் செல்லாத அளவு, சூரியனுக்கு மிக அருகே சென்று சாதனை படைக்க இருக்கிறது.

பூமியில் உயிர்கள் வாழ மூல காரணமாக விளங்குவது சூரியன். ஆனாலும், சூரியனை பற்றிய பல விஷங்கள் அறிவியலுக்கு அப்பாற்பட்டே உள்ளது. அதனால், சூரியனை பற்றி பல புதிய தகவல்களை பெற, பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியது. இந்த ஆண்டு துவக்கத்தில் பார்க்கர் விண்ணில் பாய்ந்தது. இந்நிலையில், இதுவரை எந்த மனித இயந்திரமும் செல்லாத அளவு, சூரியனுக்கு மிக அருகே சென்று சாதனை படைத்துள்ளது பார்க்கர். 

இதற்கு முன், 1976ம் ஆண்டு, ஜெர்மன் - அமெரிக்க கூட்டணியில் உருவாக்கப்பட்ட 'ஹீலியோஸ் 2' என்ற விண்கலம், சூரியனில் இருந்து 4.27 கோடி கிலோமீட்டர் தூரம் வரை சென்றது. தற்போது அதை தாண்டி சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கிறது பார்க்கர். பார்க்கரின் பயண திட்டத்தின் படி, 24 முறை சூரியனுக்கு நெருக்கமாக பறந்து சென்று, தகவல்களை சேகரிக்க உள்ளது. நாளை மறுநாள், சூரியனுக்கு அருகே முதல் முறை செல்கிறது. 2024ம் ஆண்டு, 24வது முறை சூரியனுக்கு நெருக்கமாக செல்லும்போது, வெறும் 38 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் பார்க்கர் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP