Logo

ப்ளு மூன், பிளட் மூன், சூப்பர் மூன் பற்றி தெரியுமா?

ப்ளு மூன், பிளட் மூன், சூப்பர் மூன் பற்றி தெரியுமா?
 | 

ப்ளு மூன், பிளட் மூன், சூப்பர் மூன் பற்றி தெரியுமா?

சந்திரகிரகணம் வர இருக்கிறது. அதற்குள் பிளட் மூன், சூப்பர் மூன் என்று விதவிதமாக அழைக்க தொடங்கிவிட்டனர். உண்மையில் இவை எல்லாம் என்ன என்று தெரியுமா?

ப்ளு மூன்

ப்ளு மூன் என்றால் பலரும் நிலவு நீல நிறமாகத் தெரியும் என்று நினைக்கின்றனர். உண்மையில், ஒரே மாதத்தில் ஏற்படக் கூடிய இரண்டு முழு நிலவு நிகழ்வைத்தான் நீல நிலவு என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். அதாவது, முழு நிலவு முதல் நிலவு தேய்பிறையாக அமாவாசை வருகிறது. அதன்பிறகு வளர்பிறையாக முழு நிலவு ஏற்படுகிறது. இதற்கு 29.5 நாட்கள் ஆகிறது.

அதனால், ஒரு மாதத்தில் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை வருவதுதான் வழக்கமாக இருக்கிறது. ஆனால், இரண்டு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருவது உண்டு. இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதம் 1 மற்றும் 31ம் தேதி பவுர்ணமி வந்தது. இதுவே ப்ளு மூன். அடுத்த ப்ளு மூனைக் காண 19 வருடங்கள் காத்திருக்க வேண்டும். 2037ல்தான் ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி வரும் நிகழ்வு நடக்கும்.

சூப் பர் மூன்

பூமியானது நீள் வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல், நிலவும் நீள் வட்டப் பாதையில் பூமியைச் சுற்றுகிறது. நிலவு தன் நீள் வட்டப்பாதையின் பூமிக்கு மிகக் குறைந்த தூரத்துக்கு வரும் நிகழ்வைத்தான் சூப்பர் மூன் என்கிறோம். அதாவது, வழக்கத்தை விட நிலவு பெரியதாகத் தெரியும். இந்த சந்திர கிரகணத்தின்போதும் மூன்றரை லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே நிலவு வெகு தொலைவில் இருந்தால், அதன் அளவு மிகச்சிறியதாகத் தெரியும். அதை மைக்ரோ மூன் என்று சொல்வார்கள்.

பிளட்  மூன்

சந்திரகிரகணத்தின் போது, நிலவுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வருகிறது. அப்போது பூமியின் நிழல் முழுவதும் நிலவை மறைக்கிறது. முற்றிலும் மறைந்து, பூமி நகரும்போது சூரிய கதிர் நிலவின் விளிம்பில் பட்டும்போது, ரத்தச் சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, பூமியின் விளிம்பில் பட்டு பிரதிபலிக்கும் ஒளியும், நிலவில் விழும் சூரிய ஒளியும் இணைந்து இந்த இளஞ்சிவப்பு நிறத்தை ஏற்படுத்துகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP