பாதியில் முடிந்தது கூகுளின் விண்வெளி போட்டி!

கூகுள் நடத்திய விண்வெளி போட்டி பாதியில் முடிந்தது
 | 

பாதியில் முடிந்தது கூகுளின் விண்வெளி போட்டி!


எக்ஸ் ப்ரைஸ் என்ற தனியார் நிறுவனம், கூகுளுடன் சேர்ந்து நிலவுக்கு செயற்கைகோள் அனுப்பும் போட்டி ஒன்றை நடத்தியது. இளம் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் கொண்ட குழு சேர்ந்து இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம். சர்வதேச அளவில் 5 அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் இந்தியாவை சேர்ந்த டீம்இண்டஸ் என்ற அணியும் அடங்கும். 

நிலவுக்கு ஒரு ராக்கெட் மூலம் செயற்கைகோள் அனுப்பி, அதை அங்கு தரை இறக்கி, ரிமோட்டில் இயங்கும் ஒரு குட்டி வாகனம் மூலம் நிலவின் பகுதிகளை HD-யில் படம்பிடித்து பூமிக்கு அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு சுமார் 125 கோடி ரூபாய் வரை பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டன. 

சர்வதேச அளவில் தேர்வான 5 அணிகளும், கடந்த 10 ஆண்டுகளாக இந்த போட்டியில் வெல்ல கடுமையாக போராடி வந்தனர். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் செயற்கைக்கோளை எந்த அணியாலும் அனுப்ப முடியாததால், காலக்கெடு தள்ளி வைக்கப்பட்டது. இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்ட நிலையில், போதிய முதலீடு இல்லாத காரணத்தால், இந்திய அணி போட்டியில் இருந்து சமீபத்தில் விலகியது. 

இந்நிலையில், தற்போது எந்த அணியாலும் குறிப்பிட்ட தேதியில் நிலவுக்கு செயற்கைக்கோளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வெற்றியாளர் இல்லாமலே, கூகுள் மற்றும் லூனார் எக்ஸ் இந்த போட்டியை முடித்துக் கொண்டன. 

"வெற்றியாளரை தேர்ந்தெடுப்பது மட்டும் இந்த போட்டியின் நோக்கமல்ல. ஒவ்வொரு முறை இதை நடத்தும்போதும், யாரவது வெற்றி பெறுவார்களானால், இந்த போட்டி நடத்துவதில் பயனே கிடையாது. கலந்து கொண்டவர்கள் இந்த காலகட்டத்தில் எவ்வளவு சாதித்துள்ளார்கள் என்பது தான் முக்கியம். தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நாங்கள் நடத்துவோம்" என லூனார் எக்ஸ் குழுமம் அறிவிப்பு வெளியிட்டது.

போட்டியில் கலந்து கொண்ட பெரும்பாலான அணிகள் பல தனியார் நிறுவனங்களின் விண்வெளி திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP