ஜூலை 22 -இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2 !

சந்திராயன் -2 விண்கலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 22) பிற்பகல் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று தெரிவித்துள்ளது.
 | 

ஜூலை 22 -இல் விண்ணில் பாய்கிறது சந்திராயன் -2 !

சந்திரனின் தென் துருவத்தை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள சந்திராயன் -2 விண்கலத்தை, திங்கள்கிழமை (ஜூலை 15) அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான கவுன்ட் டவுனும் தொடங்கிய நிலையில்,  எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விண்கலத்தை செலுத்தும் திட்டம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்திராயன் -2 விண்கலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 22) பிற்பகல் 2:43 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இன்று தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP