விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!
 | 

விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

அமெரிக்க தொழிலதிபர் ஈலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஃபால்கன் ஹெவி என்கிற தனது அதிநவீன ராக்கெட்டை இன்று விண்ணுக்கு செலுத்தியது. உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட்டாக கருதப்படும் இந்த ஃபால்கன் ஹெவி, ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ராக்கெட் தளத்தில் இருந்து ஏவப்பட்டது. 

அந்த ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்திய இரண்டு ராக்கெட் பூஸ்ட்டர்களும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தால், ஒரே நேரத்தில் தரையிறக்கப்பட்டது பார்வையாளர்களை கவர்ந்தது. 

விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

இந்த ஃபால்கன் ஹெவி ராக்கெட்டால், 64 டன் எடையை விண்ணுக்கு சுமந்து செல்ல முடியும். நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் செலுத்தப்படும் விண்வெளி திட்டங்களுக்கு, இனி இந்த ராக்கெட் அதிகளவில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வழக்கமான குறும்பு பாணியில், ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை சோதனை செய்யும்போது, வெறும் சரக்குகளை அதில் அனுப்பாமல், தனது சொந்த கரை விண்ணுக்கு அனுப்பியுள்ளார் ஈலான் மஸ்க். அவரது டெஸ்லா ரோட்ஸ்டர் என்ற மின்சார காரை, ஃபால்கன் ஹெவி ராக்கெட்டில் சேர்த்து அனுப்பி, அதை விண்ணில் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்த திட்டமிட்டிருந்தார்.

விண்ணில் பறக்கும் கார்; ஸ்பேஸ் எக்ஸ் புதிய சாதனை!

சிகப்பு நிறத்திலான அந்த கார், தற்போது வெற்றிகரமாக விண்ணில் நிறுத்தப்பட்டுள்ளது. காரின் ட்ரைவர் சீட்டில், விண்வெளி உடையில் ஒரு மனித பொம்மை உட்கார வைக்கப்பட்டுள்ளது. அந்த காரின் ஸ்பீக்கரில், டேவிட் பௌவி என்ற அமெரிக்க பாடகர் பாடிய 'ஸ்பேஸ் ஆடிட்டி' என்ற பாடல் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருக்குமாம்.

எந்த கிரகத்திலோ விண் கல்லிலோ மோதாத வரை, இனி வரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, மஸ்க்கின் கார் விண்ணில் பறந்து கொண்டிருக்கும்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP