Logo

இன்னைக்கு சந்திரகிரகணம்... மிஸ்பண்ணிடாதீங்க!

 | 

இன்னைக்கு சந்திரகிரகணம்... மிஸ்பண்ணிடாதீங்க!

இன்று (ஆகஸ்ட் 7) சந்திரகிரகணம்... இரவு 10.52க்குத் தொடங்கும் சந்திரகிரகணம் நள்ளிரவு 12.48 வரை நீடிக்கும். முழு நிலவும் மறையும் நிகழ்வு இரவு 11.50 மணி அளவில் நிகழலாம். சந்திரகிரகணம் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்வோம்... சந்திரகிரகணம் முழு நிலவு (பவுர்ணமி) தினத்தன்றுதான் ஏற்படும். இந்த நேரத்தில், சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும். பொதுவாக ஒரு வருடத்தில் 2 - 5 சூரிய கிரகணமும், 3 சந்திர கிரகணமும் ஏற்படலாம். மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் சந்திக்கும்போது, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி, தூரத்தைப் பொருத்து மூன்று வகையான சந்திரகிரகணம் ஏற்படுகிறது. அவை பூரணச் சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், பூமியின் நிழல் நிலவுக்குள் விழும் சந்திரகிரகணம். சந்திரகிரகணம் 40 நிமிடங்களில் இருந்து மூன்று மணி நேரம் வரை நிகழலாம். 2000ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட சந்திரகிரகணம் 106 நிமிடங்கள் 25 விநாடிகள் நீடித்தது. 1859ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி ஏற்பட்ட சந்திர கிரகணத்தின் போது வெறும் மூன்று விநாடிகள் மட்டுமே நிலவு மறைக்கப்பட்டது. அடுத்தச் சந்திரகிரகணம் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஏற்படும். இதையும் இந்தியாவில் காணலாம். 4753ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி ஏற்படப் போகும் சந்திரகிரகணம் தான் மிக நீண்ட சந்திர கிரகணமாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டு 106 நிமிடங்கள் 35 விநாடிகள் சந்திரகிரகணம் நிகழப்போகிறது. இந்து சமய நம்பிக்கைப்படி, சந்திரகிரகணம் ஏற்பட ராகு தான் காரணம். சந்திரகிரகணத்தின்போது சமைக்கப்படும் உணவு தூய்மையற்றதாகக் கருதப்படும். கோயில் நடைகள் அடைக்கப்படும். சந்திரகிரகணத்தைப் பார்ப்பதால் ஏதுவும் நிகழாது. வெறும் கண்களாலேயே காணலாம். சூரிய கிரகணம் போலக் கண்களைப் பாதுகாக்க பிரத்தியேக கருவிகள் எதுவும் தேவையில்லை. பைனாக்குலர் வைத்துப் பார்க்கும்போது இன்னும் சிறப்பாக இருக்கும். இன்றைக்கு மேகம் ஒத்துழைப்பு அளித்தால் அனைவரும் கட்டாயம் சந்திரகிரகணத்தைப் பார்த்து ரசியுங்கள். முடிந்தால், இந்த அரியத் தருணத்தை நினைவில்கொள்ளப் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP