உங்கள் ராசிக்கான ராசிக்கல் !

ராசிக்கல் என்பது ஜோசியம் பார்த்து பூஜை செய்து அணிவது என்பது மாறி, இன்று பேஷன் என்ற பெயரில் பலரின் விரல்களில் காண முடிகிறது. ஆனால் சரியான ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த ராசிக்கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று.
 | 

உங்கள் ராசிக்கான ராசிக்கல் !

ராசிக்கல் என்பது ஜோசியம் பார்த்து பூஜை செய்து அணிவது என்பது மாறி, இன்று பேஷன் என்ற பெயரில் பலரின் விரல்களில் காண முடிகிறது. ஆனால் சரியான ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் மட்டுமல்லது ஏற்றங்களும் உண்டாகும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எந்தெந்த ராசிக்கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசிக்கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சில சமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட ஏற்படுத்தலாம்.

                                                     உங்கள் ராசிக்கான ராசிக்கல் !

எனவே, எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக்கல் பொருத்தமானவை என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

உங்கள் ராசிக்கான ராசிக்கல் :

மேஷம் - பவளம் (மேஷ ராசிக்காரர்கள் பவளம் அணிவதன் மூலம் அவர்களது கோபம் தணிந்து, அதிர்ஷ்டம் உண்டாகும்).

ரிஷபம் - வைரம் (ரிஷப ராசிக்காரர்கள் வைரம் அணிவதன் மூலம் மகிழ்ச்சியையும், உடல் வசீகரத்தையும் கொடுக்கும்.)

மிதுனம் - மரகதம் (மிதுன ராசிக்காரர்கள் மரகதம் அணிவதால், தொழிலில் விருத்தியும், அதிர்ஷடமும் கிடைக்கும்)

கடகம் - முத்து (கடக ராசிக்காரர்கள் முத்து அணிவதன் மூலம், மன அமைதியும், மகிழ்ச்சியும், செல்வ விருத்தியும் கிடைக்கும்)

சிம்மம் - மாணிக்கம் (சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் அணிவதால், மிகுந்த அதிர்ஷ்டசாலி ஆகலாம்.)

கன்னி - மரகதம் (கன்னி ராசிக்காரர்கள் மரகதம் அணிவதால், தொழிலில் விருத்தியும், அதிர்ஷடமும் கிடைக்கும்)

துலாம் - வைரம் (துலாம் ராசிக்காரர்கள் வைரம் அணிவதன் மூலம், யோகத்தையும், மகிழ்ச்சியையும், உடல் வசீகரத்தையும் கொடுக்கும்.)

விருச்சிகம் - பவளம் (விருட்சக ராசிக்காரர்கள் பவளம் அணிவதன் மூலம் அவர்களது கோபம் தணிந்து, அதிர்ஷ்டம் உண்டாகும்).

தனுசு - கனக புஷ்பராகம் (மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கல்லை அணிவதால், மன அமைதியும், செல்வ விருத்தியும் கிடைக்கும்)

மகரம் - நீலக்கல் ( நீலக்கல்லானது செல்வ விருத்தியும், செல்வாக்கையும், தெய்வீக தன்மையையும் கொடுக்கும்)

கும்பம் - நீலக்கல் ( நீலக்கல்லானது செல்வ விருத்தியும், செல்வாக்கையும், தெய்வீக தன்மையையும் கொடுக்கும்)

மீனம் - கனக புஷ்பராகம் (மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கல்லை அணிவதால், மன அமைதியும், செல்வ விருத்தியும் கிடைக்கும்)

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP