சாேதனைக் காலங்களில் காங்கிரசுக்கு கை கொடுத்த ‛நீஸ்’ மாநிலங்கள்!

தேர்தல் களம், வடக்கே கை கொடுக்காத காலத்தில் கூட, அப்போதைய பிரதமர் இந்திரா தென் மாநிலத்தில் போட்டியிட்ட வரலாறும் உண்டு. காங்கிரசுக்கு எப்போதெல்லாம் சாேதனைக் காலம் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம், நீஸ் மாநிலங்கள் எப்படி கை கொடுத்தன என்பதைப் பற்றித்தான் வரும் தொடர்களில் பார்க்க இருக்கிறோம்.
 | 

சாேதனைக் காலங்களில் காங்கிரசுக்கு கை கொடுத்த ‛நீஸ்’ மாநிலங்கள்!

வட மாநிலங்கள், தென் மாநிலங்கள் சரி, அதென்ன புதிதாக நீஸ் மாநிலங்கள். ஆம்... ‛நார்த் ஈஸ்ட், ஈஸ்ட் மற்றும் சவுத்’ எனப்படும், வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென் மாநிலங்களைத் தான், சுருக்கமாக நீஸ் என அழைக்கிறார்கள். 

சுதந்திரம் பெற்ற காலம் தொட்டே, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மிகப் பெரிய அரசியல் கட்சியாக வலம் வந்தது. ஜவஹர்லால் நேரு காலம் வரை, அந்த கட்சிக்கு மிகப் பெரிய செல்வாக்கு இருந்தது. அவரின் மறைவுக்குப் பின், லால் பகதுார் சாஸ்த்திரி சொர்ப்ப காலம் மட்டுமே பிரதமராக இருந்தார். அவரும் மறைந்த பின், நேருவின் மகள் இந்திராவின் தலைமையில் காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் துவங்கியது. 

அப்போது, எதிர்க்கட்சிகளாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் ஜனதா தளம், ஜனதா கட்சி ஆகியவை, ஆங்காங்காங்கே சில இடங்களில் வெற்றி பெற்று, தங்களை கட்டமைத்துக் கொண்டிருந்தன. முதலில் நாடு முழுவதும் செல்வாக்கு பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, நாளடைவில், மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க துவங்கியது. 

ஆண்டுகள் செல்லச் செல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களில் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், மத்தியில், காங்கிரஸ் கட்சி அவ்வளவு எளிதாக ஆட்சியை பறிகொடுக்கவும் இல்லை. 

ஆனால், பல நேரங்களில், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாேதனையை ஏற்படுத்திய காலங்களில் எல்லாம், வடகிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்கள், அந்த கட்சிக்கு கை கொடுத்துள்ளன. 2014ம் ஆண்டு, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி அமையும் வரை, வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகத்தான் திழ்ந்தன. 

அதே போல், கிழக்கே, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளிலும் தெற்கே, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி, திராவிட கட்சிகளின் கூட்டணியில், தமிழகமும், காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைத்ததில் பெரும் பங்கு வகித்துள்ளன. 

தேர்தல் களம், வடக்கே கை கொடுக்காத காலத்தில் கூட, அப்போதைய பிரதமர் இந்திரா தென் மாநிலத்தில் போட்டியிட்ட வரலாறும் உண்டு. காங்கிரசுக்கு எப்போதெல்லாம் சாேதனைக் காலம் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம், நீஸ் மாநிலங்கள் எப்படி கை கொடுத்தன என்பதைப் பற்றித்தான் வரும் தொடர்களில் பார்க்க இருக்கிறோம்.

தரவுகள் உதவி: சுந்தரம்.நாகராஜன், தேர்தல் கள ஆய்வாளர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP