Logo

வியாபாரிகளே கொஞ்சம் அனத்தாமல் இருங்கள்... தமிழர்களும் கோத்தபயாவும் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.. அவர்கள் பிரச்னைகளை...!!!!

கண்ணீர் துளி போல அமைந்ததாலோ என்னவோ இலங்கை மக்களின் கண்ணீரை துடைக்கவே முடிவதில்லை. இந்த கண்ணீரின் முக்கிய காரணம் தமிழர்கள் பிரச்சனை. கச்சத் தீவை தாரை வார்த்து கொடுத்த இந்திய அரசுக்கு இலங்கையில் தமிழர், சிங்களவர் பிரச்சனைகள் தொடங்கிய போதே அதில் தலையிட்டு தீர்த்து வைக்க தெரியவில்லை.
 | 

வியாபாரிகளே கொஞ்சம் அனத்தாமல் இருங்கள்... தமிழர்களும் கோத்தபயாவும் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.. அவர்கள் பிரச்னைகளை...!!!!

கண்ணீர் துளி போல அமைந்ததாலோ என்னவோ இலங்கை மக்களின் கண்ணீரை துடைக்கவே முடிவதில்லை. இந்த கண்ணீரின் முக்கிய காரணம் தமிழர்கள் பிரச்சனை. கச்சத் தீவை தாரை வார்த்து கொடுத்த இந்திய அரசுக்கு இலங்கையில் தமிழர், சிங்களவர் பிரச்சனைகள் தொடங்கிய போதே அதில் தலையிட்டு தீர்த்து வைக்க தெரியவில்லை. அப்போதே இந்த பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வு கண்டிருந்தால் அதை தொடர்ந்து நடைபெற்ற எந்த விவகாரங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆரம்பத்தில் உணர்வுகளுக்காக தொடங்கிய பிரச்சனை கடைசியில் போராக முடிந்தது. அப்போதும் கூட தமிழகத்தில் எல்லா அமைப்புகளுக்கும் பயிற்சி, பணம் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவே இலங்கை தமிழர் பிரச்சனையை பார்க்கும் பார்வை மாறிவிட்டது.

அதன் பிறகு இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்களை நினைத்து வியாபாரிகள் தவிர்த்து தமிழகத்தில் யாரும் கவலைப்படுவதில்லை. அவர்களின் வியாபாரம் கூட இலங்கை தமிழர்களுக்கு எந்த அளவிற்கு உதவி செய்யும் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

தமிழகத்தில் தமிழ் இனவாதம் பேசுபவர்களைப் போலவே, ஆங்கிலேயேர்களிடம் 133 ஆண்டு அடிமைகளாக இருந்துவிட்டு விடுதலை பெற்ற பின்னர், இலங்கையில் சிங்கள ஆதரவு இனவாதம் பெருகத் தொடங்கியது. ஆனால் அந்த காலத்தில் இஸ்லாமிய, சிங்களர்கள் இடையே ஏற்பட்ட போராட்டம் தமிழர்களை நோக்கி திரும்பியது காலத்தின் கோலம். 1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட "சிங்களம் மட்டும்" சட்டம் அது வரையில் காணப்படாத இனக்கலவரங்களுக்கு வித்திட்டன. இதை தொடர்ந்து, கடந்த 1983க்கு பின்னர் இந்த இன கலவரங்கள் உள்நாட்டுப் போராக மாறியது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இருந்தாலும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னிலை பெற்றது.

அதைத் தொடர்ந்து இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவு, தலையீடு ஆகியவற்றின் காரணமாக இலங்கை முற்றிலும் அமைதி இழந்து விட்டது. இந்நிலையில், 33 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தினர். அதில் கடைசி 10 ஆண்டுகள் இலங்கையின் பெரும்பகுதியை தங்கள் வசம் வைத்திருந்தனர்.

இதை தொடர்ந்து ஏற்பட்ட இறுதி கட்டப் போரிலாவது இந்தியா தலையிட்டு இருந்தால் இத்தனை தமிழர்கள் உயிர் இழந்து இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் பலருக்கு பரவலாக இருந்தது. ஆனால் அங்கு அது வேறு மாதிரியாக முடிந்தது. அதன் பின்னர் தான் மகிந்த ராஜபக்சே சிங்களவர்கள் மத்தியில் ஹீரோவாக மாறினார்.

அதே நேரத்தில் தமிழகத்தில், இலங்கை தமிழருக்கு ஆதரவாக பேசுபவர்களின் கருத்துக்களை, இலங்கையில் உள்ள அப்பாவி சிங்கள மக்களை மிரட்டுவதற்கு அந்த நாட்டு அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் விளைவு தற்போது நடந்த தேர்தலில் தெளிவாக தெரிந்துள்ளது. அங்கு பெளத்த சிங்களவர்கள், மற்றவர்கள் என்று பிரிந்து கிடக்கும் நிலையிலும்,பெளத்த சிங்களவர்களால் ஆட்சியை உருவாக்க முடிந்த அளவிற்கு மற்றவர்களால் இணைந்தும் கூட முடியவில்லை.

அந்த நாட்டில் என்னவோ நடக்கட்டும், முடிந்தால் அங்குள்ள தமிழர்களை காப்பாற்றுவோம், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாகவே குடியுரிமை கூட பெற முடியாமல் அகதிகளாக இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு நன்மையை செய்வோம், என்று பயணிக்க வேண்டிய அரசியல் கட்சிகளும், மீடியா நக்சல்களும் அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

அதற்கு பதிலாக கோத்த பயராஜபக்சே எப்படி வெற்றி பெற்றார், அவரால் தமிழர்கள் இனமே அழிக்கப்பட்டு விடும் என்று இங்கே மிரட்டல் தொனியில் பேசி வயிறு வளர்க்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசுவதை தமிழகத்தில் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்லாவிட்டாலும், இலங்கையில் அதன் எதிரொலி வேறு விதமான விளைவுகளை தான் கொடுக்கிறது.

இந்நிலையில், தமிழர்களும் இஸ்லாமியர்களும் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் நான் அனைவருக்குமான அதிபராக தான் இருப்பேன் என்ற கோத்தபயா ராஜபக்ஷேயின் பேச்சு, தேர்தலுக்கு பின்னர் ஓர் அரசியல்வாதியின் முதிர்ச்சியை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, இங்குள்ள அரசியல்வாதிகளின் கூற்றுக்களுக்கு பதிலளித்த கோத்தபயா ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார்கள், அவர்கள் இலங்கை தமிழர்களை பகடைக்காயாக வைத்து மூன்றாம் தர அரசியல் செய்கிறார்கள் என்று சாடி உள்ளார். உண்மையிலேயே இலங்கை தமிழர்களின் எதிர்காலம் சுபிட்ஷமாக அமைய பொறுப்புடன் செயல்படுமாறு வலியுறுத்தியும் உள்ளார்.

இது தான் இன்றைய தேவை. ஆனால் இங்குள்ளவர்கள் அதை கட்டாயம் செய்ய மாட்டார்கள். இறுதிக் கட்ட போரின் போது தமிழகத்தில் கடுமையான பேராட்டம் நடத்தியவர்கள், கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்கள். இது குறித்து தமிழத்தில் பெரும் கவலை இல்லை என்றால் கூட இலங்கையில் நிச்சயமாக ஏமாற்றாத்தை ஏற்படுத்தி இருக்கும்.

தமிழக அரசியல் கட்சிகள் மாணவி அனிதா, சிறுவன் சுஜீத், மாணவி ஃபாத்திமா, பேராசிரியை நிர்மலா தேவி, என்று ஒவ்வொரு விஷயமாக தேடிக் கண்டு பிடித்து தங்கள் ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வது போல, இலங்கையில் அவர்கள் தங்கள் ஓட்டு வங்கிக்காக எதையோ செய்கிறார்கள்.

அதற்காக இலங்கையை சீனா தன் வசப்படுத்தி விடும், பாகிஸ்தான் அந்த நாட்டுடன் நட்பு கொண்டாடும் என்றெல்லாம் அச்சப்பட தேவையில்லை. இலங்கையில் ஏற்படும் மாற்றத்தை மத்திய அரசு நன்கு கவனித்து வருகிறது. அதற்கு ஏற்ப அதன் நடவடிக்கைகளும் இருக்கும். கடந்த காங்கிரஸ் கட்சி அல்ல தற்போது ஆட்சி செய்யும் பாஜக என்று உணர்ந்து மோடி மீது நம்பிக்கை வைத்தால் மட்டும் போதும் இலங்கை மட்டும் அல்ல உலகின் கடைசி மூலையில் உள்ள தமிழர்களுக்கும் நல்லது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP