நாட்டின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த தமிழர்!

இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார்.
 | 

நாட்டின் முதல் நிதியமைச்சராக பொறுப்பு வகித்த தமிழர்!

இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராக போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார், ஒரு சிறந்த பேச்சாளரும், வழக்கறிஞரும் ஆவார். அதுமட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய சுதந்திரத்திற்காக போராடியவரும் ஆவார்.

தமிழ் மேல் அளவற்ற மோகம் கொண்டு தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தேர்ந்து விளங்கிய ஆர். கே. சண்முகம் செட்டியார் தமிழ் இசை இயக்கத்தைத் தோற்றுவித்தவர். இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக இருந்த பெருமையும் அவருக்குண்டு.

கோயமுத்தூரில் இவருக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் இருந்தன. கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்த இவர் பிறகு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார்.

நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் தலைவராகவும் பணியாற்றினார். கோவை நகரமன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும்,  இந்திய தேசிய சட்ட சபையின் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1923 முதல் 1929 வரை வரை, மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார்.

1947-க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக சண்முகம் செட்டியார் நியமிக்கப்பட்டார். இவர் நிதியமைச்சராக பதவியேற்ற அந்த காலத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்சிக்காக பல திட்டங்களை கொண்டுவந்து, சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்த பெரும்பங்காற்றினார்.

முதல் இந்திய பட்ஜெட்டை 1947 ஆம் ஆண்டு  தாக்கல் செய்தார். 1952 ஆம் ஆண்டு, சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய பொருளாதாரத்தின் சிறந்த நிபுணராகவும், சிறந்த பேச்சாளராகவும், தமிழ் இலக்கிய எழுத்தாளராகவும் போற்றப்பட்ட ஆர். கே. சண்முகம் செட்டியார் 1953 ஆம் ஆண்டு,  மே மாதம் 5 ஆம் நாள் தனது 61-வது வயதில் காலமானார்.

தன்னுடைய பொதுவாழ்வில் வியக்கத்தக்க சாதனைகள் புரிந்த இவர் உலகளாவிய பெருமைப் பெற்ற முதல் தமிழர் என்று சொல்லலாம்.  ‘தென்னாட்டுத் தாகூர்’ என்றும், ‘திராவிட மணி’ என்றும் அறிஞர் அண்ணாவால் மகுடம் சூட்டப்பட்டார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP