‘கர்’ நாடகம் முடியும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதுமா!

இன்றைய சூழ்நிலையில், கர்நாடக அரசியலில் ஆயிரத்து எட்டு சூழ்ச்சிகள் சுழன்று சுழன்று அடித்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்று தான். அது வாக்காளர்களை மடையர்களாக மாற்றுவது தான். அதில் அனைத்து அரசியல்வாதிகளும் வெற்றி பெற்றுகிறார்கள். இது கர்நாடகாவில் மட்டும் அல்ல என்பது தான் நமது வேதனை.
 | 

‘கர்’ நாடகம் முடியும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதுமா!

அரைக் கிணறு தாண்டுவதன் அவதியை வாக்காளர்கள் நன்கு உணர்ந்த மாநிலம் கர்நாடகம். 2018ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்த்தலில், வாக்காளர்களுக்கு பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எணணம். அதனால் தான் அந்த கட்சிக்கு, 104 இடங்களை கொடுத்தனர். மெஜாரட்டி கிடைக்காத சூழ்நிலையில், அந்த கட்சியை சேர்ந்த எடியூரப்பாவை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் வழக்கத்திற்கு மாறாக ஒரு சில நாட்களில்  பெரும்பான்மையை நிருபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். 

கடந்த, 2018 மே 17ம் தேதி இரவு வழக்கு தொடர்ந்த உடனேயே விசாரித்து, மறுநாள் மாலை 4 மணிக்கு பெரும்பான்மை நிருபிக்க உத்தரவிட்டது. தன் கட்சியினரைக் கூட சந்திக்க நேரம் இல்லாத சூழ்நிலையில், பெரும்பான்மையை நிருபிப்பது என்பது குதிரைக் கொம்புதான். அதனால் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய காங்கிரஸ், அதற்கு பதிலாக அந்த கட்சிக்கு ஆதரவு அளித்து பின்புலத்தில் இயங்க தொடங்கியது.

தமிழகத்தில் இது போன்ற சூழ்நிலை இல்லாமல் திமுக, அதிமுக பார்த்துக் கொள்கின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தால் கமல், சீமான், டிடிவி தினகரன் என்று யாரோ ஒருவரை தமிழகம் முதல்வராக பார்த்து இருக்கும்.

கொள்கை, மக்கள் விருப்பதிற்கு மாறான கூட்டணி, சிறிய கட்சிக்கு பின்னால் இருந்து பெரிய கட்சி ஆட்சி செய்வது என்று இயற்கைக்கு மாறான ஆட்சி கர்நாடகாவில் நடைபெறுகிறது. நாய் வாலை ஆட்டலாம், வால் நாயை ஆட்டக் கூடாது என்று கூட்டணி பற்றி பாஜ முக்கியத்தலைவர் இலகணேசன் கூறுவார். கார்நாடகாவில் இப்போது வாலை நாய் ஆட்டிக் கொண்டு இருக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சி 5 ஆண்டுகளில் முடிவு பெறும். அதன் பின்னர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால்; நமக்கு மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் எம்எல்ஏகள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வந்தனர். முன்னாள் முதல்வர் சித்தராமையா கூட அதே எண்ணத்தில் தான் வேறு வழியில்லாமல் இந்த கூட்டணிக்கு ஒப்புக் கொண்டார். 

ஆனால் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாதது, மேலும் ராகுலின் ராஜினாமா போன்ற நிலையில் அந்த கட்சியில் தொடர்வது வீண் வேலை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இந்த நிலையில் மத்தியில் வேலையில்லாத மல்லிகார்ஜூன கார்கே, இப்போது கர்நாடகா மாநிலத்திற்கு மீண்டும் வந்துள்ளார். அதனால் அவரது ஆதரவாளர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். 

இன்னொருபுறம் பாஜகவில் சேர்ந்தால் மாநிலத்தில் அமைச்சர் பதவி அல்லது 5 ஆண்டுகள் சலுகைகளை அனுபவிக்கும் வசதி என்று கணக்கு போட்டு, எம்எல்ஏகள் கட்சி மாறத் தொடங்கி உள்ளனர். இதன் பின்னணியில், பாஜக இருப்பது உண்மை என்றால், ஏற்கனவே 2 முறை நடத்திய ஆப்ரேஷன் தாமரை வெற்றி பெற்று இருக்கும். அவ்வாறு நடக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், எம்எல்ஏகள் கட்சித் தாவாமல் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதிலும் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. இவர்கள் ராஜினாமா செய்தால், இயல்பாகவே பாஜக ஆட்சிக்கு வந்துவிடும். அதன் பின்னர் நடக்கும் இடைத் தேர்தலில், இப்போது ராஜினாமா செய்தவர்களையே பாஜ சார்பில் நிறுத்தும் போது, மக்கள் அங்கீகாரத்துடன் அவர்கள் பாஜகவில் இணைந்ததாக கருதப்படும். ஆட்சிக்கும் ஆபத்து நேராது.

இன்றைய சூழ்நிலையில், கர்நாடக அரசியலில் ஆயிரத்து எட்டு சூழ்ச்சிகள் சுழன்று சுழன்று அடித்தாலும், அவற்றின் நோக்கம் ஒன்று தான். அது வாக்காளர்களை மடையர்களாக மாற்றுவது தான். அதில் அனைத்து அரசியல்வாதிகளும் வெற்றி பெற்றுகிறார்கள். இது கர்நாடகாவில் மட்டும் அல்ல என்பது தான் நமது வேதனை. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP