இதுதான் தொப்புள் கொடி உறவா?

இலங்கையில், அந்த நாட்டு பிரச்னைக்காக நம் தமிழகத்தில் தங்கி திட்டம் தீட்ட முடிகிறது என்றால், அது எந்தளவிற்கு துரோகச் செயல். இது போன்ற தீவிரவாதிகள் நடமாட்டத்தை, திட்டத்தை சம்பந்தப்பட்ட பகுதியினர் வெளியிட்டு இருக்க வேண்டும்.
 | 

இதுதான் தொப்புள் கொடி உறவா?

எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இருந்தே இலங்கை தமிழர்களுக்கும், தாய் தமிழர்களுக்கும் நெருக்கமான உறவு இருந்தது. விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி, ஆயுத உதவி எல்லாம் தமிழர்கள் வழங்கினார்கள். இன்று வரை இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழகத்தில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கின்றனர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ், இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய போது, அவர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதால், ராஜீவ் இலங்கையில் தாக்கப்பட்ட போது தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் அதனை வரவேற்றனர்.  ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு பலர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாலும் கூட, அவரை கொன்றவர்களை விடுவிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கிறோம்.  

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்த போது தமிழர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டங்கள் நடத்தினர். கருணாநிதி முதல்வராக இருந்த போ து, அவரை எதிர்த்தே போராட்டம் நடத்தி, இலங்கை தமிழர்களுக்கும் நமக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை தமிழகம் வெளிப்படுத்தியது. 

மத்திய அரசும் தெரிந்தும், தெரியாமலும் பல மேம்பாட்டு பணிகளை செய்து இலங்கை மறுவாழ்விற்கு திரும்பும் வகையில் உதவி வருகிறது. இப்படி இலங்கை தமிழர்களுக்கும், தமிழத்திற்கும் உள்ள உறவை,  ஈஸ்டர் அன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குழி தோண்டி புதைத்து விட்டது. 

கடந்த ஏப்ரல் 21ம் தேதி, ஏசு உயிர்த்து எழுந்ததாக கிறிஸ்த்தவர்கள் நம்பும் திருநாளில், 250க்கும் அதிகமான கிறிஸ்தவ தமிழர்கள் உயிர் இழந்தனர். இதற்கு, தேசிய தவ்ஹித் ஜமாத், ஐஎஸ் அமைப்பும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.  குண்டு வெடிப்புக்கு முன்னதாக சம்பந்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் தமிழகத்தில் முகாம் இட்டு திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற தகவலும், அதன் அடிப்படையில் நடக்கும் தேடுதல் வேட்டையும், இது தான் நம் தொப்புள் கொடி உறவுக்கு, நாம் காட்டும் பாசமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. 

இலங்கையில், அந்த நாட்டு பிரச்னைக்காக நம் தமிழகத்தில் தங்கி திட்டம் தீட்ட முடிகிறது என்றால், அது எந்தளவிற்கு துரோகச் செயல். இது போன்ற தீவிரவாதிகள் நடமாட்டத்தை, திட்டத்தை  சம்பந்தப்பட்ட பகுதியினர் வெளியிட்டு இருக்க வேண்டும்.  

இவர்களுக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாவிட்டால் கூட, அது நடந்த பிறகாவது எங்கள் பகுதியில் சந்தேகப்படும் படி சிலர் நடமாடினார்கள் என்று தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறு எதையுமே செய்யாமல், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்தது, அவர்கள் தமிழர்கள் மீது எவ்விதமான மதிப்பை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. 

ஒட்டு மொத்ததில் தொப்புள் கொடி உறவுக்கு துரோகம் செய்பவர்களை அவர்கள் சிந்திய ரத்தம், அவர்களை இழந்து தப்பிவர்களின் கண்ணீர் சும்மா விடாது என்பது நிச்சயம். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP