பெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா?

நிச்சியமாக நாம் இறக்குமதி செய்து செலவு செய்யும் கச்சா எண்ணெயை விட, எலெக்ட்ரிக் வாகனங்களால், நாம் மாசுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம். இரண்டாவது, அந்நியச் செலவாணியைக் கட்டுக்குள் வைக்கலாம். மூன்றாவது, பெட்ரோல், டீசல் வாகனங்களை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் உதிரிபாகங்கள் மிகக் குறைவு. பழுதடைவதும் குறைவு. பழுது பார்க்கும் செலவும் குறைவே!
 | 

 பெட்ரோல், டீசல் மீது வரியை ஏற்றியது சரியா?

இதை ஒரு புத்திசாலித்தனமான நகர்வு என்று சொல்லலாம். கடந்த சில வருடங்களாக, நாம் ஒரு விசயத்தை கவனித்திருப்போம். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால், மற்ற பொருட்களின் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதே நேரத்தில், ஏறிய விலை இறங்கிய போதும், எந்தப் பொருளின் விலையும் இறங்கவில்லை.  எனவே, எரிபொருள் விலையின் மீது விதிக்கப்பட்ட வரியால், பிற பொருட்களின் மீதான விலையில் மறைமுகமாக எந்த பாதிப்பும் இல்லை என்பது தெளிவாகிறது. 

சரி அப்படி என்றால், பெட்ரோல் விலை ஒரு ரூபாய் ஏற்றியது நேரடியாக பாதிப்பினை ஏற்படுத்துகிறதே? ஆம்! நிச்சியம் பாதிக்கும். பாதிக்கட்டும் என்பதற்காகத் தான் இந்த விலை ஏற்றம் செய்திருக்கிறார்கள்.  விலை அதிகமாகிறது என்ற அழுத்தம் கூடிவிட்டது என்றால், நிச்சியம் மாற்று ஏற்பாட்டினை மக்கள் ஏற்கத் தொடங்கிவிடுவார்கள். 

பெட்ரோலுக்கு மாற்று எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக் வாகனங்கள் தானே? மக்களை அதை நோக்கி நகர்த்துதலுக்கான ஒரு முன்னெடுப்பும் ஒரு காரணம். 

இரண்டாவது காரணம். இனி கச்சா எண்ணெய் நமக்கு விலை மலிவாகவே கிடைக்கப் போகிறது. நம் ரூபாயின் மதிப்பு ஏறிக் கொண்டிருப்பதாலும், அரபு நாடுகள் சிலவற்றுடன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் பாரதத்திலேயே கட்ட இருப்பதாலும், மூன்றாவதாக இந்த ஒரு ரூபாய் என்பது புதிதாக உயர்த்தவில்லை. ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை அதிகரித்த காலத்தில் மத்திய அரசு விலக்கிக் கொண்டு, இரண்டு ரூபாயிலிருந்து ஒரு ரூபாய் குறைத்திருக்கிறது.

இவற்றை எல்லாம் விட முன்னமே சொன்னபடி, அரசாங்கம் மாசுக்களை கட்டுபடுத்தவும், நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கவும், எலெக்ட்ரிக் வாகனத்தை அதிகம் பயன்படுத்தத் தூண்டுகிறது. அதன் காரணமாகத் தான், ஐந்து லட்ச உச்சவரம்பு, ஒரு லட்சம் சேமிப்பு, ஆகிய விலக்குகள் போக, புதிதாக ஒன்னரை லட்சம் ரூபாய்க்கு விலக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, நீங்கள் எலெக்ட்ரிகல் கார், பைக் போன்றவற்றை தவணை முறையில் வாங்கினால், அதற்காகக் கட்டும் வட்டியில், ஒன்னரை லட்சம் ரூபாய்க்கு வருமானவரி விலக்கு கொடுத்திருக்கிறது.

நிச்சியமாக நாம் இறக்குமதி செய்து செலவு செய்யும் கச்சா எண்ணெயை விட, எலெக்ட்ரிக் வாகனங்களால், நாம் மாசுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம். இரண்டாவது, அந்நியச் செலவாணியைக் கட்டுக்குள் வைக்கலாம். மூன்றாவது, பெட்ரோல், டீசல் வாகனங்களை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் உதிரிபாகங்கள் மிகக் குறைவு. பழுதடைவதும் குறைவு. பழுது பார்க்கும் செலவும் குறைவே! 

நிச்சியம் இதுவொரு தொலைதூரப் பார்வையுடன் தீட்டப்பட்ட திட்டமாகத் தான் தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP