பொய் பிரசாரமும்; நீதிமன்றத்தில் வருத்தமும் : ராகுலின் கதை இது!

மக்கள் எதையும் அறியாத முட்டாள்கள் என எண்ணுவோருக்கு, கடைசியில் இப்படிப்பட்ட நிலை தான் ஏற்படும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீதிபதிகளே கூறாத வார்த்தையை, எவ்வளவு தைரியமாக தேர்தல் பிரசார மேடைகளில் பேிசனார் ராகுல். அதுவும், நாட்டின் பிரதமர் என்ற பதவிக்கான மரியாதை கூட இல்லாமல், அவரை திருடன் எனக் கூறியது அநாகரிகத்தின் உச்சம் என்றே கூறலாம். ராகுலின் முறை தவறிய பேச்சுக்களும், அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததையும் பார்த்தால், வாயைத்தான் கொடுப்பான் ஏன்? வாங்கித் தான் கட்டிப்பான் ஏன் ? என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
 | 

பொய் பிரசாரமும்; நீதிமன்றத்தில் வருத்தமும் : ராகுலின் கதை இது!

பிரதமர் நரேந்திர மாேடியை, நாட்டின் காவல்காரர் என யார் ஒப்புக்கொண்டாரோ இல்லையோ, காங்கிரஸ் தலைவர் ராகுல், மூச்சுக்கு முன்னுாறு முறை அவரை சவுக்கிதார், சவுக்கிதார் எனக் கூறி, மாேடி உண்மையில் காவல்காரர் தான் என்பதை மெய்ப்பித்துவிட்டார். 

ஆம்... கடந்த, 2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, தே.ஜ., கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, நரேந்திர மாேடி, தான் ஒரு ஏழை குடும்பத்திலிருந்து, குஜராத் மாநில முதல்வராக உயர்ந்தவன் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் வகையில் பிரசாரங்களில் பேசினார். 

தான் இளம் வயதில் டீக்கடையில் வேலை பார்த்த அனுபவத்தைக் கூறி, தன்னை ஒரு சாய்வாலா எனக் கூறினார். அதாவது, டீக்கடைக்காரன் என்றார். 

மாேடியின் இந்த பேச்சுக்கு, மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியதை பார்த்து அஞ்சிய காங்கிரசார், ‛சாதாரண டீக்கடைக்காரரான மாேடியால் பிரதமர் பதவியை பிடிக்க முடியாது, வேண்டுமானால், காங்கிரஸ் கட்சி கூட்டம் நடக்கும் இடத்தில் அவர் டீ விற்கலாம்’ என காங்கிரசார் கிண்டல் அடித்தனர். 

இதன் உள் அர்த்தம் என்வென்றால், ‛டீக்கடைக்காரர் டீ விற்க மட்டுமே உரிமை உள்ளவராகிறார், நாட்டை ஆளும் தகுதியெல்லாம் அது போன்றவருக்கு கிடையாது’ என்பது தான்.

காங்கிரசாரின் இந்த கிண்டல் பேச்சு, நாடு முழுவதும் உள்ள டீக்கடைக்காரர்களை கொதிப்பில் ஆழ்த்தியது. இது, மாேடிக்கு ஆதரவான அலையை மேலும் அதிகரிக்க செய்தது. மாேடியை கிண்டல் அடிக்கிறோம் என நினைத்து, காங்., அதன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது. 

தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மாேடி, நான் பிரதான அமைச்சர் அல்ல, பிரதான சேவகன், நாட்டு மக்களின் காவல்காரன் என கூறினார். அதற்கு ஏற்றார் போல், கருப்பு பண ஒழிப்பு நவடிக்கை, வரி ஏய்ப்பை தடுக்கும் நடவடிக்கை உள்ளிட்டவற்றை செயல்படுத்தினார். வங்கிக் கடன் மாேசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்களை நாடு கடத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். 

பிரதமர் நரேந்திர மாேடிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்க முடியாத காங்கிரசார், திடீரென ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதில், அனில் அம்பானிக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில், மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மாேடி செயல்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார். 

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திரும்ப திரும்ப முன் வைத்த அவர், ஒரு கட்டத்தில், பிரதமர் நரேந்திர மாேடியை, திருடன் என்ற வகையில் பேசினார். அப்பட்டமாக அந்த வார்த்தையை சொல்லியே அழைத்தார். 

அதாவது, நாட்டை காக்கும் காவலன் நான் என பிரதமர் மாேடி தன்னை சவுக்கிதார் என கூறிக்கொண்டார். அதை கிண்டல் அடிக்கும் வகையிலும், ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் செய்துவிட்டதாகவும் கூறிய ராகுல், மாேடியை, சவுக்கிதார் சாேர் ஹை என்றார். 

அதாவது, காவல்காரன் ஒரு திருடன் என்றார். ராகுலின் இந்த பேச்சுக்கு, பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தவிர, நாட்டு மக்களால், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை, பொது வெளியில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி, திருடன் என அழைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

ரபேல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதில் எவ்வித ஊழலும் நடைபெறவில்லை எனக் கூறிய பிறகும், ராகுல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். 

இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் குறித்த அரசு ஆவணங்கள் முறைகேடாக திருடப்பட்டு, பத்திரிக்கையில் வெளியானது. அதை வைத்து, அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக, காங்கிரசார் குற்றம் சாட்டினர். ஏற்கனவே, ரபேல் வழக்கில் ஊழல் நடைபெறவில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரிப்பதாக கூறிய உச்ச நீதிமன்றம், அதில், பத்திரிக்கைகள் முறைகேடான வகையில் வெளியிட்ட திருடப்பட்ட ஆவணங்களையும் விசாரணைக்கு ஏற்படதாக தெரிவித்தது. 

இந்த தகவலை, காங்., தலைவர் ராகுல், தவறாக பிரசாரம் செய்தார். நீதிமன்றமே, பிரதமர் மாேடி ஊழல் செய்ததை ஒப்புக் கொண்டதாக கூறினார். நீதிமன்றம் அவரை திருடன் எனக் கூறியதாக பிரசாரம் செய்தார். நீதிமன்றம் சொல்லாத ஒரு கருத்தை, வலுக்கட்டாயமாக மக்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ராகுலுக்கு எதிராக, பா.ஜ., சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கு விசாரணையின் போது, காங்., தலைவர் ராகுல், தான் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார். நீதிபதிகள் கூறாத வார்த்தையை தான் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து, ராகுல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

தேசிய கட்சியின் தலைவர், எதிர்க்கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளவர். தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதாக கூறி வருபவர். அப்படிப்பட்ட ராகுலுக்கு இப்படி ஒரு அவமானம் தேவையா? 


மக்கள் எதையும் அறியாத முட்டாள்கள் என எண்ணுவோருக்கு, கடைசியில் இப்படிப்பட்ட நிலை தான் ஏற்படும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. நீதிபதிகளே கூறாத வார்த்தையை, எவ்வளவு தைரியமாக தேர்தல் பிரசார மேடைகளில் பேிசனார் ராகுல். அதுவும், நாட்டின் பிரதமர் என்ற பதவிக்கான மரியாதை கூட இல்லாமல், அவரை திருடன் எனக் கூறியது அநாகரிகத்தின் உச்சம் என்றே கூறலாம். 

ராகுலின் முறை தவறிய பேச்சுக்களும், அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்ததையும் பார்த்தால், வாயைத்தான் கொடுப்பான் ஏன்? வாங்கித் தான் கட்டிப்பான் ஏன் ? என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP