ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!

காலத்திற்கு ஏற்ப நமது கோட்பாடுகளிலும் மாற்றம் வேண்டும். பழைய கோட்பாடுகளை பிடித்து கொண்டே தற்போதைய காலகட்டத்திலும் வாழ்வதென்பது என்னை பொறுத்தவரை சரியல்ல. நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவேண்டிய பழைய கோட்பாடுகள், எதிர் காலத்திலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். காலத்திற்கேற்ப மாறுதல்கள் வேண்டும்.
 | 

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!

திலீப் பத்கோங்கர் : நீங்கள் குறிப்பிடுவது போல மார்க்சிய அரசியல் மட்டுமல்லாது எல்லா அரசியலிலும் இத்தகைய சிந்தனை தான் தற்போது உள்ளது. எல்லா வகையான அரசியலும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன. தனித்தன்மை என்ற ஒன்று மார்க்சிய அரசியலில் மட்டுமில்லை என்று கூறுகிறீர்களா ??

வி.எஸ். நைபால் : நான் ஒன்றுபட்ட கோட்பாடுகளை விரும்புவதில்லை. காலத்திற்கு ஏற்ப நமது கோட்பாடுகளிலும் மாற்றம் வேண்டும். பழைய கோட்பாடுகளை பிடித்து கொண்டே தற்போதைய காலகட்டத்திலும் வாழ்வதென்பது என்னை பொறுத்தவரை சரியல்ல. நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படவேண்டிய பழைய கோட்பாடுகள், எதிர் காலத்திலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். காலத்திற்கேற்ப மாறுதல்கள் வேண்டும். 

திலீப் பத்கோங்கர் : நீங்கள் இந்துக்களில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்பது போன்ற சில சமிக்ஞைகளை வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. உண்மையாகவே இந்து ஆட்சியின் ஆதரவாளரா நீங்கள் ??

வி.எஸ். நைபால் : இந்து ஆட்சி இங்கே அமைக்கப்பட வேண்டும் என்று நான் கூறவில்லை. இங்கே இஸ்லாமியர்களின் ஆட்சி பரந்து விரிந்துள்ளது என்று தான் குறிப்பிட்டுள்ளேன். நீங்களே சிறிது சிந்தித்து பாருங்கள். இஸ்லாமிய படையெடுப்பு இந்தியாவின் தெற்கு பகுதியின் மைசூர் நகரம் வரை பரந்து விரிந்திருந்தது. 

10ஆம் நூற்றாண்டுகளில் இருந்த இந்துக்கோலில்கள் பலவும் இஸ்லாமிய படையெடுப்பால் சிதையமடைந்த நிலையில் இருக்கின்றன. சிதிலமடைந்த அதே நிலையில் இருப்பதை விட அதை மாற்றியமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தை தான் முன்வைத்திருந்தேன். பழைய இந்தியா அழிக்கப்பட்டு விட்டது. அந்த இந்தியாவை மாற்றியமைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் அப்போதைய என்னுடைய கருத்து.

தொடரும்.........

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!

ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP