நிர்மலாவுக்கு காத்திருக்கும் சவால்கள்: எதிர்கொள்வாரா? ஏமாற்றம் தருவாரா? 

‛சேத்தபணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு, அவங்க ஆற நுாறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இந்தியர்கள் சேத்த பணத்தை நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மாேடி. அவர் ஆற நுாறு ஆக்கி சாதனை படைப்பாரா என்பது வரும் 5 ஆண்டுகளில் தெரியும். அவர் அவ்வாறு சாதிக்க எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம்.
 | 

நிர்மலாவுக்கு காத்திருக்கும் சவால்கள்: எதிர்கொள்வாரா? ஏமாற்றம் தருவாரா? 

பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது ஆட்சியில், சத்திமில்லாத மவுனப் புரட்சி ஆரம்பித்துள்ளது. சுதந்திர இந்தியாவில், முன்னாள் பிரதமர் இந்திராவை தவிர்த்து, ஆண்கள் மட்டுமே பொறுப்பு வகித்த நிதித்துறை, முதல் முறையாக ஒரு பெண்ணிடம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் நிதிப் பொறுப்பையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். அந்த வகையில்  நிதி அமைச்சர் பொறுப்பில் மட்டுமே நியமிக்கப்படும் முதல் பெண் நிர்மலா சீதாராமன். சுந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்த சண்முகம் செட்டியார் முதல், சிதரம்பரம் வரை 5 நிதியமைச்சர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நிர்மலா சீதாராமன் 6வது தமிழர்.

இதுவரையில் தமிழகத்தில் இருந்து நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த சண்முகம் செட்டியார், டி.டி கிருஷ்ணமாச்சாரி, சி. சுப்பிரமணியம் ஆர். வெங்கட்ராமன், சிதம்பரம் ஆகியோர் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிலும், சிதம்பரம் செட்டிநாட்டு அரசருக்கு உறவினர். ஆனால், நிர்மலா சீத்தராமனோ சாதாரண மத்திய வர்க்கத்து குடும்ப பின்னணியை உடையவர். 
மிகருவும் சாதாரண குடும்ப பின்னணியில் வளர்ந்த பெண் ஒருவர், நாட்டின் நிதித்துறையை கையாள உள்ளார் என்றால், அது நமக்கெல்லாம் மிகவும் பெருமைக்குரிய விஷயம் தான். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியை சிறப்பாக செய்த நிர்மலாவுக்கு, நாட்டின் நிதி நிலையை கையாளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பெரும்பாலான குடும்பங்களில், இன்றும், நிதித்துறையை கையாள்வது பெண்களாகத்தான் இருப்பர். அப்படி இருந்தால் தான், சிறுக சிறுக சேமித்து வைத்து, எதிர்கால தேவையை எளிதுடன் சமாளிக்க முடியும். அந்த வகையில், நிதித்துறைக்கு நிர்மலாவின் வருகை, நாட்டின் எதிர்காலம் சிறக்க அச்சாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. 

வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் அமைச்சராக இருந்த போது, பலவிதமான சாதனைகளை புரிந்தவர் நிர்மலா சீதாராமன். பாகிஸ்தான் துல்லிய தாக்குதல் முதல், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் வரை பல பாதுகாப்பு நடவடிக்கைகளில் இவர் பங்கு அதிகம். 

இந்த முறை ஆட்சியை பிடித்தற்கே, நாட்டின் பாதுகாப்பு பற்றிய நம்பிக்கை தான் காரணம் என்ற நிலையில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரின் செயல்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி என்பதை புரிந்து கொள்ளலாம். 

பாதுகாப்பு துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்த போது, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை, பாராளுமன்றத்தில் தவிடு பொடியாக்கியதற்கு பரிசாக, அவர் நிதித்துறைக்கு பொறுப்பு ஏற்றுள்ளார்.

இன்றைக்கும் கூட ஜிஎஸ்டி, ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு ஆகியவற்றின் பாதிப்புகள் தொடர்கின்றன. இவற்றை சரி செய்ய வேண்டிய பொறுப்பு,  நிதி அமைச்சரிடம் உள்ளது. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் இந்தியா வல்லரசாக வேண்டியதற்கான இலக்காக 2020 நிர்ணயம் செய்தார். அதை எட்டுவதற்கு இன்னும் ஓராண்டே  உள்ளது என்னும் போது, மத்திய அரசு இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். 

அதற்கு மத்திய அரசின் அச்சாணியாக உள்ள நிதி அமைச்சகம், தனது பங்கை விரைவாக செயல்படுத்த வேண்டும். மேலும் வங்கி சாரா நிதியங்களின் பிரச்சனைகள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பது போன்றவை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க வேண்டிய உடனடி சவால்கள்.

‛சேத்தபணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு, அவங்க ஆற நுாறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, இந்தியர்கள் சேத்த பணத்தை நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மாேடி. அவர் ஆற நுாறு ஆக்கி சாதனை படைப்பாரா என்பது வரும் 5 ஆண்டுகளில் தெரியும். அவர் அவ்வாறு சாதிக்க எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் அதிகம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP