சிவசேனா அதன் நிலைபாட்டிலிருந்து மாறுவதாக இல்லை - சஞ்சய் ராவுத்!!

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் பாஜக-சிவசேனா கூட்டணி இடையே, ஆட்சி அமைப்பது குறித்த கருத்து வேறுபாடு தொடர்ந்து நிலவி வரும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத், சிவசேனா அதன் நிலைபாடுகளிலிருந்து பின்வாங்க தயாராக இல்லை என்ற தகவலையும் குறிப்பிட்டுள்ளார்.
 | 

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பதவியை 2.5ஆண்டுகளாக பிரித்து கொள்ள வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கும் சிவசேனா, அதன் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக குரல் எழுப்பி வந்தது. அதன் பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், பாஜகவிற்கு எதிரான கருத்துக்களை பதிவிடுவதோடில்லாமல், சிவசேனா இல்லாமல் பாஜகவால் ஆட்சியமைக்க அமைக்க முடியாது என்பது போன்ற கருத்துக்களையும் தொடர்ந்து முன்வைத்து வந்தது. 

இந்நிலையில், தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவுத்,  "தேர்தலுக்கு முன்னர் எங்களின் நிலைபாடுகளுக்கு சம்மதம் தெரிவித்த பாஜக தற்போது மறுப்பு தெரிவிக்கிறது. ஆனால் நாங்கள், தேர்தலுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி எங்களின் நிலைபாடுகளில் நிலையாக தான் உள்ளோம். எங்களின் கருத்துக்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும், மகாராஷ்டிரா மக்கள் சிவசேனா ஆட்சிக்கு வருவதை தான் விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை அவரது வீட்டில் வைத்து சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அம்மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை சந்தித்து அரசியலின் தற்போதை நிலை குறித்து கலந்துரையாடினோம் என்று கூறிய சஞ்சய் ராவுத், அம்மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP