நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் சரத் பவார்!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.
 | 

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்த ஓர் தீர்மானத்திற்கு வருவதற்காக கடந்த ஞாயிறன்று தனது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தை தொடர்ந்து, கடந்த திங்களன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து உரையாடினார் சரத் பவார்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து, இன்று நாடாளுமன்றத்தில் மதியம் 12 மணியளவில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார் சரத் பவார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மாநிலங்களவையில் வைத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா தால் ஆகிய இரண்டு கட்சிகளும் நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாகவும், அவர்கள் தரப்பு வாதங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் முன் வைப்பதாகவும் பாராட்டியிருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதை தொடர்ந்தே தற்போதைய இந்த சந்திப்பு நிகழவிருப்பதாக தகவல்கள் கூறகின்ற நிலையில், இந்த சந்திப்பு குறித்து குறிப்பிட்டுள்ள என்.சி.பி கட்சியின் பேச்சாளர் நவாப் மாலிக், மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் நிலை குறித்து விளக்குவதற்காகவும், அவர்களின் நிலையை முன்னேற்றுவதற்காகவும் தான் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசியலில் மிகவும் முக்கியமான முகமாக திகழும் சரத் பவார், சிவசேனாவுடன் ஆட்சி அமைப்பது குறித்த உரையாடலில் ஈடுபட்டிருக்கும் நிலையிலும், பாரதிய ஜனதா கட்சியும் சிவசேனாவும் அவர்களது பாதையை தெளிவாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP