சோனியா வாழ்த்து பேனரில் ராபர்ட் வத்ரா: மீண்டும் உருவாகும் சர்ச்சை

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் ஆனதற்கு வாழ்த்து தெரிவித்த வைக்கப்பட்டுள்ள பேனரில் சோனியாவின் மருமகன் படம் இடம்பெற்றிருப்பது கட்சி உறுப்பினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததையடுத்து ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டி  புதிய தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தது. கட்சி தலைவர் பதவிக்கு பலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. 

இந்நிலையில்,  சோனியா காந்தி இடைக்கால தலைவரானதற்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் வெளியே பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் சோனியாவின் மருமகன் ராபர்ட் வத்ரா புகைபடம் இடம்பெற்றிருப்பது. மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல், பிரியங்கா ஆகியோர் கட்சியில் உள்ளதால் அவர்கள் படம் இடம்பெற்றுள்ளது என்றால், கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லாத ராபர்ட் வத்ரா படம் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது என்ற கேள்வி கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP