பாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்பு மிக பலம் வாய்ந்தது என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

பாரிஸில் ராம் பக்தி உள்ளது: யுனஸ்கோவில் பிரதமர் பேச்சு

இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான நட்பு மிக பலம் வாய்ந்தது என்று, பிரான்ஸ் யுனஸ்கோ தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாரிஸீல் உள்ள யுனஸ்கோ தலைமையகத்தில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ‘பிரான்ஸ் கால்பந்தாட்டக்காரர்களுக்கான ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் உள்ளனர். பிரான்ஸ் உலகக்கோப்பை வென்றபோது இந்தியர்கள் உற்சாகமாக கொண்டாடினர். விமான விபத்தில் பலியானவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். விமானத்தின் பாகங்களை கண்டறிய இரவு பகலாக வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். பிரான்ஸின் பாரிஸில் ராம் பக்தியும், தேசிய பக்தியும் உள்ளது. 

நான் 4 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் வந்திருந்தேன். அப்போது நன் ஒரு வாக்கு அளித்தேன். நீங்கள் மறந்திருக்கலாம் நான் மறக்கவில்லை. அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் அதை மறந்து விடுவார்கள் நான் அப்படிப்பட்டவன் அல்ல அதனால் தான் நானே அதை நினைவுபடுத்துகிறேன். இந்தியா இன்று உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நாங்கள் அளித்த வாக்கை மறப்பதில்லை அதனால் தான் மக்கள் மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்துள்ளனர். இம்முறை ஆட்சி செய்வதற்கு இல்லை நாட்டை புனரமைத்து புதிய இந்தியாவை உருவாக்குவோம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP