சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
 | 

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்!

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 

நாடு முழுவதும் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா கடந்த ஜூலை 24ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட திருத்த மசோதா இன்று நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசுத்தலைவருக்கு அனுப்பப்பட்டு அவரின் ஒப்புதல் பெற்று சட்டவடிவம் பெறும். 

இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, இந்த மசோதா சட்ட விரோதமானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP