அரசுப் பணித் தேர்வுக்கு கட்டணம் இருக்காது - ராகுல் காந்தி வாக்குறுதி

எந்தவொரு அரசுப் பணிக்கும் தேர்வு எழுதுவதற்கு இளைஞர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அரசுப் பணிக்கு தேர்வெழுதும் யாருக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்றார் ராகுல் காந்தி.
 | 

அரசுப் பணித் தேர்வுக்கு கட்டணம் இருக்காது - ராகுல் காந்தி வாக்குறுதி

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அரசுப் பணித் தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம்,சீதாப்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எந்தவொரு அரசுப் பணிக்கும் தேர்வு எழுதுவதற்கு இளைஞர்கள் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால், அரசுப் பணிக்கு தேர்வெழுதும் யாருக்கும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கட்டணத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் விலை குறையவில்லை என்றும் அவர் கூறினார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP