'பல்லே பல்லே' பாடகர் பா.ஜ.,வில் இணைந்தார்

பஞ்சாபி, ஹிந்தி மாெழி திரைப்படங்களில் பின்னணி பாடி வரும், பிரபல பாடகர் தலேர் மெஹந்தி, இன்று பா.ஜ., மூத்த தலைவர்கள் முன்னிலையில், அந்தக் கட்சியில் இணைந்தார்.
 | 

'பல்லே பல்லே' பாடகர் பா.ஜ.,வில் இணைந்தார்

பஞ்சாபி, ஹிந்தி மாெழி திரைப்படங்களில் பின்னணி பாடி வரும், பிரபல பாடகர் தலேர் மெஹந்தி, இன்று பா.ஜ., மூத்த தலைவர்கள் முன்னிலையில், அந்தக் கட்சியில் இணைந்தார். 

பாலிவுட் திரைப்படங்களில் பின்னணி பாடி வருபரும், பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவபருமான தலேர் மெஹந்தி, வட மாநில மக்களிடையே மிகவும் பிரசித்த பெற்றவர். பீஹாரில் பிறந்து வளர்ந்த சீக்கியரான மெஹந்தி, 51 உலக புகழ் பெற்ற பாடகர்களில் ஒருவர். 

உலகின் பல நாடுகளிலும் பாங்கரா வகை பாடல், நடனத்தை பிரபலப்படுத்தியவர். வட மாநிலங்களில் இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில், தலேர் மெஹந்தி, டெல்லியில் இன்று, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் முன்னிலையில், அந்த கட்சியில் இணைந்தார்.

பிரதமர் மாேடியை புகழ்ந்து பாடல் பாடிய மெஹந்தி, மிக உற்சாகத்துடன் காணப்பட்டார். அவரை தொடர்ந்து, ‛தில் மாேடி மாேடி ஹோ கயா’ அதாவது, மனம் முழுவதும் மாேடி மயமாகிவிட்டது என்ற பொருள்படும்படியான பாடலை அங்குள்ளவர்களும் பாடி மகிழ்ந்தனர். 

மெஹந்தியின் வருகையால், பா.ஜ.,வின் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP