அழ அழ சொல்லுவார் தம்மக்கள்..!

முடிவு கேடாக இருக்கும் போது அன்று வருந்தப் போவது, அந்த துன்பத்தை அனுபவிக்கப் போவது குடும்ப உறுப்பினர்கள் தான். ஆனால் ஊக்கப்படுத்தியவர்கள் ஊரைவிட்டே ஓடி விடுவார்கள். இன்று பாஜக அழ அழ சொல்லி இருக்கிறது. ஏற்பது நம் நலனைப் பொருத்தது.
 | 

அழ அழ சொல்லுவார் தம்மக்கள்..!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசி குறையும் என்று 2004ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதற்கு ஏற்ப அந்த கட்சியும் வெற்றி பெற்று. மன்மோகன் சிங் பிரதமராக பதவிஏற்றார். 100 நாட்கள் கடந்ததும் பத்திரி்கையாளர்கள் விலைவாசி ஏன் குறைய வில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மன்மோகன் சிங் பதில் அளித்த போது எங்களிடம் மந்திரக்கோலா இருக்கிறது என்றார். 

அழ அழ சொல்லுவார் தம்மக்கள்..!

பொதுவாக எதிர்கட்சியாக இருப்பதை விட ஆளும் கட்சியாக இருக்கும் போதுதான் எந்த கோரிக்கையை நிறைவேற்ற எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடவடிக்கை எடுத்தால் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில் தங்கத்தை உலக வங்கியில்  அடகு வைத்தோமே அந்த நிலைதான் மீண்டும் ஏற்படும். 

அழ அழ சொல்லுவார் தம்மக்கள்..!

இந்த அடிப்படையில் தான் பாஜ தற்போது வெளியிட்டு வாக்குறுதிகளை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவிட முடியாது. அதற்கு கடந்த தேர்தலில் மோடி சொன்னதாக கூறப்படும் ரூ. 15 லட்சமே உதாரணம். 

தற்போது பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளி்ல் பல தொடங்குவது மட்டும் தான் அடுத்த ஆட்சியில் நிறைவு அதற்கு அடுத்த ஆட்சியில் தான். 

விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களில் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிக்கு வட்டி தள்ளுபடி என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. விவசாயம் இன்றைக்கு 3 சீட்டை விட மோசமான சூதாட்டமாக மாறிவிட்டது. அவர்களுக்கு சாகுபடி கிடைக்காத காரணத்தால் வாங்கிய கடனை கட்ட இயலாது. ஆனாலும் அடுத்த சாகுபடிக்கு கடன் வாங்கித்தான் ஆக வேண்டும். அரசு, கூட்டுறவு சங்கங்கள் ஏராளமான நிபந்தனைகள் விதித்தால், விவசாயி தனியாரிடம் தான் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதற்கு தீர்வு அவர்களுக்கு அரசே கடன் வழங்குவது தான் தீர்வு.

வேளாண் பொருட்களுக்கு உரிய விலை வழங்குவது, சாகுபடிக்கு தேவையான நீர்பாசன வசதி ஏற்பாடு செய்து தருவது என்று அத்தியாவசியான தேவைகளை பூர்த்தி செய்து விட்டாலே விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். நெல், பருத்தி போன்றவற்றை சாகுபடி செய்பவர்களை விட தோட்டப் பயிர் விவசாயிகள் வளமாக இருக்க, அதில் ஒரு முறை முதலீடு செய்து, குறிப்பிட்ட காலம் பாதுகாத்தால் போதும். ஆனால் நெல்போன்றவை அப்படி அல்லது. 

அழ அழ சொல்லுவார் தம்மக்கள்..!

இந்த சூழ்நிலையில் ஒட்டு மொத்த கடன் தள்ளுபடி என்று அறிவிக்கும் போது பாதிக்கப்பட்ட விவசாயி பலன் அடையும் அதே வேளையில் கடனை முறையாக திருப்பி செலுத்தும் விவசாயி பைத்தியகாரனாக மாறிவிடுகிறான். இதனால் அவர்களின் நேர்மை இழிவு படுத்தப்படுகிறது. 

தற்போது கடனை முறையாக செலுத்தும் விவசாயிக்கு வட்டி தள்ளுபடி என்று அறிவித்திருப்பது வரவேற்க தக்கது. இதன் மூலம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற எண்ணம் விவசாயிக்கு ஏற்படும். அதே நேரத்தி்ல உண்மையிலேயே கடன் செலுத்த முடியாத விவசாயிக்கு, அதாவது சாகுபடி பொய்துப் போகும் போது, பயிர் காப்பீடு திட்டங்கள் மூலம் அதிகபட்சமான காப்பீடு  தொகையை தந்து அல்லது அதைக் கொண்டு கடன் கணக்கை நேர் செய்வது அவசியம். 

திமுக ஆட்சியின் போது கூட்டுறவு சங்கங்களில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்று ஒட்டு மொத்தமாக ஒரு தொகை தெரிந்ததே தவிர்த்து, அதனால் கிடைத்த பலன் எதுவும் தெரியவில்லை. அதே நேரத்தி்ல் ஊராட்சிகளுக்கு அரசு கடன் தள்ளுபடிக்காக தர வேண்டிய தொகையை உடனே வழங்கவில்லை. இதனால் அவர்கள் மீண்டும் கடன் கொடுக்க வழியில்லாமல் போனது. கூட்டுறவு சங்க செயலாளர் ஓய்வு பெற்றால் கூட கடனை வசூல் செய்துதான் ஓய்வு கால பலன்களை எடுத்துக் கொள்ள வேண்டிய அவலம். 

ஒரு நாட்டை முன்னேற்றம் அடைய செய்ய நினைக்கும் ஒரு அரசு இது போன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் என்று திட்டங்களை அறிவிக்க முடியாது. பாஜ தேர்தல் அறிக்கை சொல்வதும் இது தான். நம் பெரியவர்கள் அழ அழ சொல்லுவார் தம்மக்கள், சிரிக்க சிரிக்க சொல்லுவார் பிற மக்கள் என்று அந்த காலத்திலேயே சொல்லி இருக்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர் தவறு செய்தால், அடித்து மற்றவர்கள் அடித்துக் கூட  திருத்துவார்கள். ஆனால் மற்றவர்களோ மாப்ளே என்ன வசதிடா என்று பாராட்டி தவறான  பாதையில் செல்வதை ஊக்கு விப்பார்கள்.

ஆனால் அதன் முடிவு கேடாக இருக்கும் போது அன்று வருந்தப் போவது, அந்த துன்பத்தை அனுபவிக்கப் போவது குடும்ப உறுப்பினர்கள் தான். ஆனால் ஊக்கப்படுத்தியவர்கள் ஊரைவிட்டே ஓடி விடுவார்கள். இன்று பாஜக அழ அழ சொல்லி இருக்கிறது. ஏற்பது நம் நலனைப் பொருத்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP