பிகாரில் படுதோல்வியடைந்த ராஷ்டிரிய ஜனதா தளம்

பிகாரில் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
 | 

பிகாரில் படுதோல்வியடைந்த ராஷ்டிரிய ஜனதா தளம்

பிகார்  மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதாதள கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

பிகார்  மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 39 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முக்கிய கட்சியான லாலு தலைமையலான ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. மத்திய அமைைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சத்ருஹன் சின்ஹாவை விட 2 லட்சத்திற்கும் மேலான வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளரும், லாலு பிரசாத் யாதவின் மகளுமாகிய மிசா பாரதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கிர்பால் யாதவிடம் 43 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியடைந்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP