Logo

ராஜஸ்தான் - சல்லுன்னு எகிறிய வாக்குப்பதிவு

ராஜஸ்தானில் காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்து வாக்குப்பதிவு மந்தமாக இருந்து வந்த நிலையில், திடீரென மக்கள் விறுவிறுப்பாக வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். நண்பகல் ஒரு மணி நிலவரப்படி அங்கு 41.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
 | 

ராஜஸ்தான் - சல்லுன்னு எகிறிய வாக்குப்பதிவு

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கியதில் இருந்து வாக்குப்பதிவு மந்தமாக இருந்து வந்த நிலையில், திடீரென மக்கள் விறுவிறுப்பாக வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். நண்பகல் ஒரு மணி நிலவரப்படி அங்கு 41.53 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பொதுவாக தேர்தல் களத்தில் 60 முதல் 70 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவாகும். சில சமயங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராஜஸ்தானில் மதியம் ஒரு மணிக்குள்ளாக 41 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும் என்ற நிலையில், இந்த சதவீதம் இன்னும் கூடுதலாக வாய்ப்பு இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான மனநிலை தென்படுவதாக ஒரு கருத்தும், பிரதமர் மோடியின் இறுதி நேர பிரசாரத்தில் அது மாறியிருப்பதாக மாற்றொரு கருத்தும் நிலவுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் விறுவிறுவென உயருவது பா.ஜ.க.வுக்கு கை கொடுக்குமா, அல்லது பாதகமாக அமையுமா என்பதை அறிய, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 11ம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும். எது, எப்படியோ, பாலைவன தேசமாகக் கருதப்படும் ராஜஸ்தானில் மக்கள் தயக்கமின்றி ஜனநாயகக் கடமையாற்றி வருகின்றனர் என்பதே நிதர்சனம்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP