Logo

ராஜஸ்தான் - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இனி கல்வித் தகுதி கட்டாயமில்லை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் குறைந்தபட்ச பள்ளிக் கல்வித் தகுதி கட்டாயம் என்று முந்தைய பா.ஜ.க. அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்வது என முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
 | 

ராஜஸ்தான் - உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இனி கல்வித் தகுதி கட்டாயமில்லை

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமெனில் குறைந்தபட்ச பள்ளிக் கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்படுகிறது. கல்வித் தகுதி கட்டாயம் என்று முந்தைய பா.ஜ.க. அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்வது என தற்போது புதிதாக பதவியேற்றிருக்கும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

மாவட்டப் பஞ்சாயத்து, ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போட்டியிட வேண்டுமெனில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்திருப்பதும், கிராமப் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் 8ம் வகுப்பில் தேர்ச்சியடைந்திருப்பதும் கட்டாயம் என்று முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் தாழ்த்தப்பட்ட பிரிவு மக்கள் 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்றும் அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கல்வித் தகுதி கட்டாயம் என்ற விதியை ரத்து செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மாநிலத்தில் மூடப்பட்டுள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மற்றும் ஊடகவியல் படிப்புக்கான ஹரிதேவ் ஜோஷி பல்கலைக்கழகம் ஆகியவற்றை மீண்டும் திறப்பது என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP