ராகுலின் பிரதமர் கனவு நிறைவேறாது: தமிழிசை திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிரதமர் கனவு நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திட்டவட்டமாக கூறினார். மேலும் அவரால் மிகப்பெரிய தேர்தல் கூட்டணியை அமைக்க முடியாது என்றும் தமிழிசை தெரிவித்தார்.
 | 

ராகுலின் பிரதமர் கனவு நிறைவேறாது: தமிழிசை திட்டவட்டம்

காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியின் பிரதமர் கனவு நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்  திட்டவட்டமாக கூறினார்.

சென்னை கே.கே.நகரில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் திருநாள் விழாவில்  பங்கேற்ற பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளன. 

மாயாவதியும், அகிலேஷ் யாதவும் அங்கு கூட்டணி அமைத்துள்ளதால், அவர்களை தவிர்த்துவிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மிகப்பெரிய கூட்டணியை அமைக்க முடியாது. அவ்வாறு அமைத்தாலும் அவரது பிரதமர் கனவு நிறைவேறாது. திமுக தலைவர் ஸ்டாலின் ஏதோ தெரியாமல், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திவிட்டார்.

அரசியல்ரீதியாக குற்றம்சுமத்தப்பட்டாலும், அதனை பொய்யென முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிரூபிக்க வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP