தேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் !

எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் தமக்கு தேசநலன் மட்டுமே முக்கியம். அதுவே தமது தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் அவர், வாரணாசி தொகுதியில் மீ்ண்டும் போட்டியிடுகிறார்.
 | 

தேசநலனே தாரக மந்திரம் : பிரதமர் மோடி உருக்கம் !

எது நடந்தாலும், நடக்காவிட்டாலும் தமக்கு தேசநலன் மட்டுமே முக்கியம். அதுவே தமது தாரக மந்திரம் என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் மீ்ண்டும் போட்டியிடுகிறார். இதையொட்டி, இன்று மாலை அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்ற அவர், "கங்கா ஆரத்தி" வழிபாட்டிலும் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து வாரணாசியில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது:
கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் நடைபெறவில்லை. அதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நடைபெற்று முடிந்த, உலக பிரசித்தி பெற்ற கும்பமேளா திருவிழாவில் சிறு அசம்பாவித சம்பவமும் நிகழவில்லை என்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்கவும், அதற்காக எந்தவொரு உச்சபட்ச நடவடிக்கையை எடுக்கவும் மத்திய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது. அது புல்வாமாவாக இருந்தாலும் சரி... உரியாக இருந்தாலும் சரி... பயங்கரவாதத்துக்கு தக்க பதிலடி தரப்படும்.

எது நடந்தாலும், நடக்காவிட்டாலும், எனக்கு தேசநலன் மட்டுமே முக்கியம். அதுவே என் தாரக மந்திரம். இந்த உயர்ந்த குறிக்கோளுக்காக என் வாழ்வையே அர்ப்பணித்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக தெரிவித்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP