வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
 | 

வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 கட்டங்கள் முடிவடைந்துள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 29, மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் எஞ்சிய 4 கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. 

இதில், பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யும் பொருட்டு, நேற்று வாரணாசியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. 

தொடர்ந்து, இன்று பிரதமர் மோடி வாரணாசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுத்தாக்கல் செய்த போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். 

வாரணாசி தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி!

அதேபோன்று தமிழகத்தில் அதிமுக சார்பில், துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பி.வேணுகோபால் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

வாரணாசியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய பின்னர், வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். 

காங்கிரஸ் கட்சி சார்பில் வாரணாசி தொகுதியில், கடந்த முறை பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட அஜய் ராஜ் என்பவர் தான் இந்தமுறையும் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் பெண் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP