மேற்கு வங்க கலவரத்துக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ்- அமித் ஷா பேட்டி

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்துக்கு முழுக்க முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் மே 23க்கு பின் இது மம்தா பானர்ஜிக்கு தெரியவரும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
 | 

மேற்கு வங்க கலவரத்துக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ்- அமித் ஷா பேட்டி

மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்துக்கு முழுக்க முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் மே 23க்கு பின் இது மம்தா பானர்ஜிக்கு தெரியவரும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் நேற்று பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் கலவரம் வெடித்தது. இதனால், கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. அமித் ஷா வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமித் ஷா, நேற்று நடந்த வன்முறை முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஈஸ்வர்சந்திர வித்யாசாகரின் சிலையை உடைப்பதன் மூலம் திரிணாமுல் காங்கிரஸ் அனுதாபத்தை தேட முயற்சிக்கிறது.

எங்கள் கட்சிக்காக பிரசாரம் செய்ய நான் மேற்கு வங்கத்திற்கு வந்தேன். ஆனால் என்னை வெளியாள் என்று மம்தா கூறுகிறார். ஒரு வேளை மம்தா டெல்லி, மும்பை அல்லது வேறு மாநிலத்துக்கு சென்றால் அவரை வெளியாள் போல் யாராவது நடத்துகிறார்களா.

என்னை விட வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் மம்தா, ஆனால் அவரது கட்சியினர் ஜனநாயக படுகொலையை செய்து விட்டனர். வாக்குச்சாவடிக்குள் புகுந்து கலவரம் நடத்துவது, பாஜகவின் போஸ்டர்களை கிழித்து கொளுத்துவது போன்ற அருவருப்பான அரசியல் அநாகரீகங்களை திரிணாமுல் காங்கிரஸ் செய்து வருகிறது.

இதற்கெல்லாம் மே 23 ம் தேதிக்கு பிறகு விடை தெரியும். பாஜக அகில இந்திய அளவில் போட்டியிடும் ஒரு தேசிய கட்சி. ஆனால் வெறும் 42 தொகுதிகளுக்கு மேற்கு வங்கத்தில் மட்டும் போட்டியிடும் கட்சியல்ல பாஜக என்பதை மம்தா பானர்ஜி புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP