தீவிரவாதம் முக்கியமான பிரச்னையில்லை என்றால், உங்களுக்கு எதற்கு இசட் பிாிவு பாதுகாப்பு? ராகுலுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி

தீவிரவாதம் முக்கியமான பிரச்னையில்லை என்றால் உங்களுக்கு அளித்து வரும் இசட் பிாிவு பாதுகாப்பை வேண்டாம் என்று மறுத்து விடுவது தானே என்று ராகுல் காந்திக்கு சு ஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
 | 

தீவிரவாதம் முக்கியமான பிரச்னையில்லை என்றால், உங்களுக்கு எதற்கு இசட் பிாிவு பாதுகாப்பு? ராகுலுக்கு சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி

தீவிரவாதம் முக்கியமான பிரச்னையில்லை என்றால் உங்களுக்கு அளித்து வரும் இசட் பிாிவு பாதுகாப்பை வேண்டாம் என்று மறுத்து விடுவது தானே என்று ராகுல் காந்திக்கு சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஹைதராபாத்தில் தோ்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், நம் நாட்டின் மீது தீவிரவாதிகள் தொடுக்கும் தாக்குதல்களை  நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. மேலும் அது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை என்றும் தற்போது பிரதானமான பிரச்னையாக இருப்பது வேலை வாய்ப்பின்மைதான். எனவே தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு அளித்து வரும் முக்கியத்துவத்தை விட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்குதான் முக்கியத்துவம் தரவேண்டும் என்று ராகுல் பேசி வருகிறாா்.

அப்படியென்றால் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் இசட் பிாிவு பாதுகாப்பினை வேண்டாம் என்று மறுத்து விடலாமே.

ராஜிவ் காந்தி மறைவுக்கு பின் அவரது குடும்பத்திற்கு தொடா்ந்து இசட் பிாிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.  தீவிரவாதம் ஓர் பிரதான பிரச்னை இல்லையென்றால், அவருக்கு வழங்கப்பட்டு வரும் இஸட் பிரவு பாதுகாப்பினை வேண்டாம் என மறுத்துவிட வேண்டியதுதானே என்று சுஷ்மா ஸ்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP