டெல்லியில் எடுபடுமா சந்தர்ப்பவாதம்?

அதையெல்லாம் மீறி கூட்டணி அமைந்தாலும் தற்போது காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களை திரும்பபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். சோற்றை இலையில் போட்டு விட்டு, சாப்பிட செல்லும் முன்பு எழுந்து செல்ல சொன்னால் எத்தனை கோபம் ஏற்படும். அதை சமாளிப்பது மிகவும் கஷ்டம்.
 | 

 டெல்லியில் எடுபடுமா சந்தர்ப்பவாதம்?

மோடியை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்பதே நாடு முழுவதும் உள்ள அரசியல்கட்சிகளின் ஒற்றை நோக்கமாக உள்ளது. இதற்காக, எதிரும் புதிருமான கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. உ.பி.,யில் மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி, சில மாநிலங்களில் இடதுசாரிகள், காங்கிரஸ் கூட்டணி என்று கூட்டணி வைத்துள்ளவர்களை ஒவ்வொரு மாநிலமாக பார்த்தால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது உரைக்கும். 

நாட்டின் பல மாநிலங்களில் எடுபட்ட இந்த சந்தர்ப்பவாதம், தலைநகர் டெல்லியில் எடுபடாமல் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை எதிர்த்து, உணர்வுகளின் அடிப்படையில் உருவான ஆம் ஆத்மியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைப்பதில் தான் பல சிக்கல்கள். 

தவளையும், நண்டும் இணைந்து கூட்டணி அமைப்பது போல, இந்த கூட்டணி அமையும் முயற்சி பல மாதங்களாக நடைபெற்று வருகிறது. நண்டு தண்ணீருக்கு இழுக்கும், தவளை தரைக்கு இழுக்கும் என்பதை போல காங்கிரஸ், ஆம் ஆத்மியும் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறது. 

அடுத்த ஆண்டு டெல்லியில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. யாரை எதிர்த்து ஆம் ஆத்மி உருவானதோ, அந்த ஷீலா தீட்சித் தான் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர். இதனால் தான் காங்கிரஸ் இந்த கூட்டணிக்கு தயங்குகிறது. 

உணர்சி அலையில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துவிட்டாலும், இந்த தேர்தல், வரும் சட்டசபைத் தேர்தலில் அந்த கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டி இருக்கிறது. அதனால், அந்த கட்சிக்கு கூட்டணி வைக்க வேண்டிய கட்டாயம். அதனால் தான் அவர்கள், இடதுசாரிகளை போலவே இப்போது பாஜக எதிர்ப்பை முன் நிறுத்தி கூட்டணிக்காக முயற்சி செய்கிறார்கள். 

பாஜக எதிர்ப்பு உண்மையான காரணம் என்றால் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, இருகட்சிகளும் கூட்டணி அமைத்திருக்கலாம். அதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்கள் தயாராக இருந்த போதும், ஷீலா தீட்சித் போன்றவர்கள் தயாராக இல்லை. கடந்த 2013ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், மொத்தம் உள்ள, 70 சட்டசபைத் தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பிடித்தது. 

யாருக்கும் மெஜாராட்டி கிடைக்காத நிலையில், 8 இடங்களை மட்டுமே பிடித்த காங்கிரஸ் கட்சி பாஜவிற்கு எதிராக ஆம் ஆத்மியை வெளியில் இருந்து ஆதரிப்பதாக கூறியது. அதே நேரத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் கூட்டணி ஆட்சியின்  முதல்வர் நாற்காலி, முள் நாற்காலி என்று தெரியவந்தது கெஜ்ரிவாலுக்கு. 

இதனால் அடுத்த 43 நாளில் மறுதேர்தல், லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விட வில்லை என்ற புனித கோஷம் எடுபட்டது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மீது இருந்த கோபம், பாஜக தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி செய்ததால் பெற்ற அனுபவம் போன்றவை, மக்களை ஆம் ஆத்மி பக்கம் திரும்ப செய்தது. 

விளைவு 67 இடங்களில் ஆம் ஆத்மி, 3 இடங்களி்ல பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் பூஜியம். அதாவது 70 இடங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் துடப்ப கட்டையால் துாக்கி வீசப்பட்டது காங்கிரஸ். இந்த நிலையில் தான், லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு எதிராக இருகட்சிகளும் கூடடணி பற்றிய பேச்சுவார்த்தை தொடரந்து நடத்தி வருகிறது. 

காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த பின்னரும், பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஒரு புறம் இது நடந்தாலும் இன்னொருபுறம் ராகுல், கெஜ்ரிவால் வார்த்தை போரில் ஈடுபட்டனர். டில்லி மட்டும் அல்லாமல் அரியானாவிலும் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தாலும், மற்றொரு புறம் அதுவும் முறிந்து போய் கொண்டிருக்கிறது. 

அதையெல்லாம் மீறி கூட்டணி அமைந்தாலும் தற்போது காங்கிரஸ் கட்சியால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களை திரும்பபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். சோற்றை இலையில் போட்டு விட்டு, சாப்பிட செல்லும் முன்பு எழுந்து செல்ல சொன்னால் எத்தனை கோபம் ஏற்படும். அதை சமாளிப்பது மிகவும் கஷ்டம். 

இதையெல்லாம் மீறி கூட்டணி அமைந்து தேர்தலை சந்தித்தால் மக்கள் இந்த சந்தர்ப்பவாத கூட்டணியை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை. அதையும் மீறி இந்த கூட்டணி வெற்றி பெற்றால் இழப்பு என்னவோ காங்கிரஸ் கட்சிக்குதான் என்பது நிச்சயம்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP