தேர்தல் தோல்வி எதிராெலி: ஜார்க்கண்ட் காங்., தலைவர் ராஜினாமா

மக்களவை தேர்தலில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாெத்தமுள்ள, 14 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி, ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதை அடுத்து, அந்த மாநில காங்., தலைவர், அஜய் குமார் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
 | 

நாடு முழுவதும் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி, 303 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதே சமயம், காங்., கட்சி, 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாெத்தமுள்ள, 14 தொகுதிகளில், பா.ஜ., 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி, ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜார்க்கண்ட் முத்கி மோர்ச்சா மற்றும் பிற கட்சி தலா ஓர் இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில், ஜார்க்கண்ட்டில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, அந்த கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக, மாநில தலைவர் அஜய் குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, கட்சி தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP