தனது வாக்கினை பதிவு செய்த டெல்லியின் மூத்த வாக்காளர்!

டெல்லியில் பச்சன் சிங் என்ற 111 வயதுடைய மூத்த வாக்காளர் திலக் விஹார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
 | 

தனது வாக்கினை பதிவு செய்த டெல்லியின் மூத்த வாக்காளர்!

டெல்லியில் பச்சன் சிங் என்ற 111 வயதுடைய மூத்த வாக்காளர், திலக் விஹார் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.

முன்னதாக, காரில் வந்த அவரை தேர்தல் அதிகாரிகள் சிறப்பாக வரவேற்று,  வீல் சேரில் அமரவைத்து அழைத்து சென்று அவருடைய வாக்கை பதிவு செய்ய உதவினர்.

கடந்த 2015-ஆம் ஆண்டு வரை பச்சன் சிங் சைக்கிளில் வந்து வாக்களித்து வந்ததாக, அவருடைய 63 வயது இளைய மகன் ஜஸ்பீர் சிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லி உள்பட 7 மாநிலங்களில், 59 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP