நாற்காலிக்காக கட்டி உருண்ட காங்கிரஸ் தலைவர்கள்!

தெலுங்கானா மாநில அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள், நாற்காலிக்காக ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி கட்டி உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

தெலுங்கானா மாநிலத்தில், சமீபத்தில் வெளியான 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பெயில் ஆகியுள்ளனர். இதற்கு, கல்வித்துறையின் மெத்தன போக்கே காரணம் என, எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதையடுத்து, டி.ஆர்.எஸ்.,கட்சியை சேர்ந்த முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஐதராபாத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்., மூத்த தலைவர் ஹனுமந்த ராவ், தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து நின்று பேசினார். 

அந்த சமயத்தில் மற்றொரு காங்., தலைவர் வந்ததால், அதே கட்சியை சேர்ந்த நாகேஷ் முதிராஜ், அவரை ஹனுமந்த ராவின் இருக்கையில் அமர வைத்தார். இதனால் கடும் கோபமடைந்த ஹனுமந்த ராவ், நாகேஷை தாக்கினார். நாகேஷும் பதிலுக்கு தாக்கியதால், இருவரும் கட்டி உருண்டனர். 

அங்கிருந்த மற்ற தலைவர்கள், தொண்டர்கள் இருவரையும் விலக்கிவிட்டு சமாதானம் செய்தனர். இது அந்த கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP