தெலுங்கானாவை பிரித்ததற்கான விலையை கொடுத்தது காங்கிரஸ் - சோனியா காந்தி

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை, முந்தைய காங்கிரஸ் அரசு பிரித்த நிலையில், அதற்கடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதை குறிப்பிடும் வகையில் சோனியாவின் பேச்சு அமைந்திருந்தது.
 | 

தெலுங்கானாவை பிரித்ததற்கான விலையை கொடுத்தது காங்கிரஸ் - சோனியா காந்தி

அரசியல் ரீதியாக விலை கொடுக்க வேண்டியிருக்கும் எனத் தெரிந்தும், தெலுங்கானா மாநிலத்தை காங்கிரஸ் கட்சி பிரித்ததாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். தெலுங்கானா மாநிலம் உருவான பிறகு, முதல்முறையாக அங்கு நேற்றிரவு வந்திருந்த சோனியா காந்தி, சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தபோது இதனை குறிப்பிட்டார்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை, முந்தைய காங்கிரஸ் அரசு பிரித்த நிலையில், அதற்கு அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதைக் குறிப்பிடும் வகையில் சோனியாவின் பேச்சு அமைந்திருந்தது. அவர் மேலும் பேசியதாவது:

குழந்தைகளை ஒரு தாய் பல நாள்களுக்கு பின்னர் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாரோ, அதேபோன்று, தெலுங்கானாவில் இருப்பது குறித்து நானும் உணருகிறேன். ஒவ்வொரு தாயும் அவரது குழந்தைகள் வளமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், இந்தப் புதிய மாநிலத்தின் தற்போதைய நிலையைக் கண்டு என் மனம் மிகவும் வருந்துகிறது.

இந்த மாநிலம் உருவாக்கப்பட்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஆளும் டி.ஆர்.எஸ். கட்சி நிறைவேற்றவில்லை. இந்த நிலை மாறுவதற்கு தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. டி.ஆர்.எஸ். கட்சிக்கு பாடம் புகட்டும் வகையிலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு கொண்டு வரும் வகையிலும் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது என நாங்கள் முடிவு செய்தபோது என்ன மாதிரியான கஷ்டங்களை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரு பகுதி மக்களின் நலன்களையும் நாங்கள் யோசித்துப் பார்த்தோம். ஆனால், தெலுங்கானா பகுதி மக்களின் உணர்வுகளும், எண்ணங்களும், மாநிலத்தை உருவாக்கலாம் என்ற மாபெரும் முடிவை எடுப்பதற்கான தைரியத்தை அப்போதைய பிரதமர் மன்மோன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு வழங்கியது என்றார் சோனியா காந்தி.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP