காங்., - ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு தொடர்கிறது: அரவிந்த் கெஜ்ரிவால்

மத்தியில், பாரதிய ஜனதா கட்சியை ஆட்சிக் கட்டிலில் மீண்டும் அமரவிடாமல் தடுக்க, காங்., - ஆம் ஆத்மி கட்சியிடையே கூட்டணி அமைய வேண்டும். அதற்கான முயற்சியை கடைசி வரை மேற்கொள்வோம் என, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
 | 

இது குறித்து, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் கூறியதாவது:"பா.ஜ., தலைமையிலான ஆட்சி, மத்தியில் மீ்ண்டும் மலர்ந்து விடக்கூடாது. மக்கள் விரோத ஆட்சியை அகற்றவும், அந்த கட்சியை மீண்டும் ஆட்சி அமைக்க விடாமல் தடுக்கவும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கூட்டணி மலர வேண்டும். 
அப்படிப்பட்ட கூட்டணி அமைய எந்த எல்லைக்கும் செல்வோம். அதற்கான முயற்சிகள் கடைசி நிமிடம் வரை மேற்கொள்ளப்படும்" என அவர் குறினார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP