ஏழைகளை சுரண்டியவர்கள் பிரதமரை விமர்சிக்கலாமா? - ஸ்மிருதி இரானி கேள்வி

பல்வேறு ஊழல்களை செய்து, காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்பியவர்கள் பிரதமரை விமர்சிக்கலமா? என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். ராபர்ட் வதேரா லண்டனில் சொத்து வாங்கியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
 | 

ஏழைகளை சுரண்டியவர்கள் பிரதமரை விமர்சிக்கலாமா? - ஸ்மிருதி இரானி கேள்வி

ஏழைகளை சுரண்டியவர்கள் பிரதமரை விமர்சிக்கலாமா? என்று மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குற்றம்சாட்டும் வகையில், அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

அதேபோல, முறைகேடு வழக்குகளை எதிர்கொண்டுள்ள ராகுல் காந்தியின் மைத்துனர் ராபர்ட் வதேராவையும், ஸ்மிருதி இரானி தாக்கிப் பேசினார். தெலுங்கானா மாநிலம், மஹபூப்நகரில், பா.ஜ.க. நடத்திய பொதுக்கூட்டத்தில் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டு பேசியதாவது:

சிலர் ஏழைகளை பல ஆண்டுகளாக சுரண்டிக் கொண்டு, பணக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அவரது மைத்துனர் லண்டனில் சொத்துக்களை வாங்குகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் பதவி மீது ஆசை வந்துள்ளது. பல்வேறு ஊழல்களை செய்து, காங்கிரஸ் கட்சியின் கஜானாவை நிரப்பியவர்கள் பிரதமரை விமர்சிக்கலமா? என்றார் அவர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP