பீகாரில் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பீகாரில் மட்டுமே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. பிற மாநிலங்களில் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
 | 

பீகாரில் மட்டுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி - ஐக்கிய ஜனதா தளம் விளக்கம்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பீகார் மாநிலத்தில் மட்டுமே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளோம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது. வாய்ப்புள்ள பிற மாநிலங்களில் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.

பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.க.வும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே சமயம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தும் வகையில், அங்கு தனித்துப் போட்டியிடுவது என்று ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, “பா.ஜ.க.வுடனான கூட்டணி பீகார் மாநிலத்தில் மட்டுமே. மற்ற மாநிலங்களில் கூட்டணி கிடையாது. பிற மாநிலங்களில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்துள்ளோம். லட்சத்தீவுகளில் உள்ள ஒரேயொரு தொகுதிக்கு எங்கள் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம்’’ என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP