மகாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21 தேர்தல்!

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
 | 

மகாராஷ்டிரா, ஹரியானாவில் அக்.21 தேர்தல்!

மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 9ஆம்  தேதியுடனும், ஹரியானா சட்டப்பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி குறித்து  டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைக்கான தேர்தல் அக் 21 ஆம் தேதி நடைபெறும். 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்தார். 

மேலும், செப். 23ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் செப்.30 ஆம் தேதி. அக்.1 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளில் 8.94 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹரியானாவில் 90 தொகுதிகளில் 1.82 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். திங்கட்கிழமை முதல் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி தொடங்குகிறது. பதற்றமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP